DSpace Repository

விஞ்ஞான மெய்யியலில் தர்க்கப் புலனறிவாதச் சிந்தனையின் வகிபங்கு: ஒரு விமர்சன ஆய்வு

Show simple item record

dc.contributor.author Thileepan, R.T.
dc.date.accessioned 2025-04-02T07:53:57Z
dc.date.available 2025-04-02T07:53:57Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11188
dc.description.abstract விஞ்ஞான வளர்ச்சி தனக்குரிய ஆய்வு நெறிகளையும் அடிப்படை நியதிகளையும் வகுத்துக்கொண்டு மேனோக்கிய பாய்ச்சலாக முன்னேற்றம் கண்டுவருகின்றது. இதனால் விஞ்ஞான விதிகள் மற்றும் கொள்கைகள் புதிய தகவல்களால் மீள் பரிசோதனைக்குள்ளாகின்றதோடு விஞ்ஞான அறிவும் வளர்ச்சியடைந்துகொண்டு செல்கின்றன. விஞ்ஞான வரலாற்றின் செல்நெறிப்போக்கில் கண்டுபிடிப்புக்கள் மற்றும் புதிதுபுனைதல்களோடு வௌ;வேறுபட்ட முறையியற் சிந்தனைகளின் தோற்றமும் அறிவுசார் வளர்ச்சியைக் கட்டமைத்திருக்கின்றன. பொதுவாக முறையியற் சிந்தனைகள் ஆரம்பகால ஆய்வுப் பாரம்பரியத்திலிருந்து செல்வாக்குச்செலுத்தியிருந்தாலும் கூட பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிய மாற்றங்களுடன் எழுச்சிகண்டது. இந்நிலையில் பல்வேறுட்ட கருத்தியல்களுடன் இம்முறையியற் சிந்தனைகள் தோற்றம்பெற்று விஞ்ஞான அறிவைக் கட்டமைத்திருந்தமையும் அறியத்தக்கது. வரலாற்று நோக்கில் மொழிப் பகுப்பாய்வுச் சிந்தனைகள் தோற்றம்பெற்றதையடுத்து புதிய பரிமாணங்களுடன் தர்க்கப் புலனறிவாதச் சிந்தனையும் வளர்ச்சிகண்டிருந்தது. குறிப்பாக இம்முறையியற் சிந்தனை நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கும் அறிவைக் கட்டமைப்பதற்கும் ஆதாரமாக விளங்கியிருக்கின்றன. அதாவது விஞ்ஞானங்களை ஒழுங்கமைத்தல், விஞ்ஞானங்களுக்குப் புதிய அடித்தளத்தினை வழங்குதல் மற்றும் பௌதிகவதீதச் சிந்தனைகளைப் புறம்தள்ளல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவேதான், இவ்வாய்வானது தர்க்கப் புலனறிவாதச் சிந்தனையின் சிறப்பம்சங்களினையும் விஞ்ஞான மெய்யியலில் அதன் வகிபங்கினையும் விமர்சன ரீதியாக ஆராய்கிறது. இவ்வாய்விற்கு வரலாற்று ரீதியான அணுகுமுறை, பகுப்பாய்வு முறை மற்றும் விமர்சன ஆய்வு முறை போன்ற முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு ஆய்வு தொடர்பான கட்டுரைகள், நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளப் பதிவுகள் என்பன தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Peradeniya, Sri Lanka. en_US
dc.subject விஞ்ஞான மெய்யியல் en_US
dc.subject அறிவு வளர்ச்சி en_US
dc.subject தர்க்கம் en_US
dc.subject புலனறிவாதம் en_US
dc.title விஞ்ஞான மெய்யியலில் தர்க்கப் புலனறிவாதச் சிந்தனையின் வகிபங்கு: ஒரு விமர்சன ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record