dc.description.abstract |
கலை என்பது மனிதனின் அக அனுபவங்களைக் குறியீடுகள் மூலமும் அதேசமயம்
உடலாலும் உள்ளத்தினாலும் ஒருங்கிணைத்துச் செயற்படுகின்ற ஒரு நுட்பமான திறனாகவும்
விளங்குகின்றது. பண்டைய காலங்களில் கலைகள் அழகியல் விதிகளுக்கு அமைய செயற்பட்டு
வந்ததோடு சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டதாகவும் காணப்பட்ட . குறி ன க் ப்பாக கலைகள்
மனிதனுடைய கற்பனைத்திறனை வெளிப்படுத்துவ hகவும் மனித வாழ்க்கைக னவ ;கான ஒழுக்க
நெறிகளைப் போதிப்ப hகவும் அமைந்திருந்த . டால்ஸ்டாய் என்ற அறிஞர், ஒழுக் னவ ன க விதிகளுடனும்
ஒழுக்க உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் கலைகள் அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டதன்
தாற்பரியமும் இதுவே. இருப்பினும் அவை காலப்போக்கில் தமக்கான அழகியல் விதிகளிலிருந்து
மாற்றமடைந்து கொண்டிருக்கின்றமை கண்கூடு. இம்மாற்றங்களுக்கு பல்வேறுபட்ட காரணங்கள்
செல்வாக்குச் செலுத்தினாலும் நுகர்வோர் சமூகத்தின் வகிபங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகக்
காணப்படுகிறது. குறிப்பாக நுகர்வோரினை மையப்படுத்தி கலைக வெளிக்கொணருகின்ற க் ளை
வேளையில் அவை நிர்ணயிக்கப்பட்ட அழகியல் விதிகளிலிருந்து விடுபட்டுச் செல்கின்றன. இதனால்
அ உண்மைத்தன்மை சரியான முறையில் வெளிப்படுத்தப்படுகின்றதா என்பதில் சிக்கல் வற்றின்
எழுகின்றது. இந்நிலையில் இவ்வாய்வானது கலைகளின் செல்நெறிப்போக்கு, விதிகளிலிருந்து
விடுபடுவதற்கான காரணங்கள் மற்றும் நுகர்வோர் சமூகத்தினுடைய வகிபங்கு என்பன பற்றித்
தெளிவுபடுத்துவதாக அமைகின்றது. இவ்வாய்விற்கு விபரணமுறை, பகுப்பாய்வுமுறை மற்றும்
விமர்சன ரீதியான அணுகுமுறை போன்ற முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆய்விற்
கான தரவுகள் கலை மற்றும் நுகர்வோர் சமூகம் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள், ஆய்வு கட்டுரை
கள் மற்றும் இணைய தளப் பதிவுகள் என்ப வற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. |
en_US |