dc.contributor.author | Shiromi, M. | |
dc.date.accessioned | 2024-08-23T07:35:13Z | |
dc.date.available | 2024-08-23T07:35:13Z | |
dc.date.issued | 2020 | |
dc.identifier.isbn | 978-955-44441-3-3 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10754 | |
dc.description.abstract | தமிழ்மொழியினை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்துள்ள முதல் இலக்கண நூலாக தொல்காப்பியம் விளங்குகின்றது. தொல்காப்பியத்தின் வழிகாட்டலிலேயே பின்வந்த இலக்கண நூல்கள் கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு மொழியில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு இலக்கணங்களை வழங்கியுள்ளன. குறித்தவொரு மொழியானது அம்மொழி பேசும் மொழியாளர்களின் பரம்பல்களுக்கு ஏற்ப பல்வேறு கிளைமொழிகளை கொண்டிருக்கும். இவ்வாறான சூழலில் அம்மொழிக்கான இலக்கணங்கள் வகுக்கப்படும்போது அம்மொழியின் கிளைமொழிகளின் பண்புக் கூறுகளையும் உள்வாங்கி இலக்கணம் படைப்பது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகின்ற சூழலில் தொல்காப்பியத்தில் மக்களது பேச்சு வழக்குகள் குறிப்பாக தமிழ்க்கிளைமொழி வழக்குகளுக்கான ஏற்புகள் இடம்பெற்றுள்ளனவா என்பதனை ஆராய்ந்து, அவற்றுக்கான சான்றாதாரங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வகையில் இவ்வாய்வுக்குரிய தரவுகள் தொல்காப்பிய எழுத்ததிகார, சொல்லதிகார உரைநூல்கள் மற்றும் தமிழ்மொழிக்கான ஆய்வுக்கட்டுரைகள் ஊடாகப் பெறப்பட்டு சமுதாய மொழியியல் அணுகுமுறையில் கிளைமொழி வழக்குகளுக்கான ஏற்புகள் பற்றிய சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | தொல்காப்பியம் | en_US |
dc.subject | கிளைமொழி வழக்குகள் | en_US |
dc.subject | சமுதாய மொழியியல் | en_US |
dc.subject | இலக்கண ஆய்வுகள் | en_US |
dc.title | தொல்காப்பியத்தில் கிளைமொழி வழக்குகளின் ஏற்புகள் பற்றிய சமுதாய - மொழியியல் ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |