Abstract:
தமிழ் மொழியில் பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் இடையே இலக்கண அமைப்பில் வேறுபாட்டை அடையாளம் காணமுடிகின்றது. காலங்களின் அமைப்பினைப் பொறுத்த வரையில் மரபிலக்கணமும் இக்காலத் தமிழ் இலக்கணமும் மூன்று வகை எனக் குறிப்பிடுகின்றன. எனினும் பேச்சுத் தமிழில் சூழ்நிலைகளிற்கு ஏற்ப வினைச்சொற்கள் மட்டும் காலத்தினை அடையாளப்படுத்துகின்றன என்பதனைக் குறிப்பிட முடியாது. இவ் ஆய்வானது யாழ்ப்பாணப் பிரதேசப் பேச்சுத் தமிழினை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டுள்ளது. ஆய்வானது விளக்கமுறை ஆய்வு முறையினைக் (Descriptive Method) கொண்டமைந்துள்ளதுடன் தரவு சேகரிப்பதற்கான பிரதான முறையாக நேரடி அவதானிப்பு முறை (Direct Obserration Method) ஆய்வாளனால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அன்றாடம் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் உள்ள தொடர்பாடல் சூழ்நிலைகள் பல அவதானிக்கப்பட்டு ஆய்விற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. நூறு மாதிரி எடுப்புக்கள் ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் நோக்கமாக இக்காலத் தமிழ் இலக்கணத்தில் காலங்களின் நுட்பமான அம்சங்களினை வெளிக்கொணர்வதாக அமைகின்றது.