DSpace Repository

ஜீன் போல் சார்த்தர் மற்றும் மிஷெல் பூக்கோவின் சுதந்திரம் பற்றிய சிந்தனைகளும் தற்கால உலகில் அவற்றின் பொருத்தப்பாடும்.

Show simple item record

dc.contributor.author Aishwarya, S.
dc.contributor.author Nirosan, S.
dc.date.accessioned 2024-03-18T04:53:33Z
dc.date.available 2024-03-18T04:53:33Z
dc.date.issued 2024
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10233
dc.description.abstract ஐரோப்பிய தத்துவ மரபில் அதிகம் பேசப்பட்ட எண்ணக்கருவாக சுதந்திரம் காணப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இருப்பியல்வாத சிந்தனையாளரான ஜீன் போல் சார்த்தர் மற்றும் இருபதாம் ந}ற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பின் நவீனத்துவ சிந்தனையாளரான மிஷெல் பூக்கோ போன்றவர்கள் சுதந்திரம் பற்றிய கருத்தாடல்களை வௌ;வேறுபட்ட கோணங்களில் எடுத்துரைத்தவர்களாகக் காணப்படுகின்றனர். சுதந்திரம் என்பது உண்மையில் அனைவராலும் விரும்பப்படும் விடயம். சுதந்திரத்தின் பெறுமானங்கள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஆனால் சுதந்திரத்தை நாம் எவ்வாறு வரையறுக்கின்றோம் என்பதனை கருத்தில் கொள்;ள வேண்டும். உலகம் முழுமையாக இருப்பதால் நமக்கு வரம்பற்ற சுதந்திரம் இருப்பதாகவும் எமது மதிப்புக்களை தேர்ந்தெடுப்பதற்கும் நாம் விரும்பும் உலகத்தை உருவாக்குவதற்கும் எமக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது என்றும் சாத்தர் கூறுகின்றார். நூம் தெரிவுசெய்வாதற்கான உரிமையைப் பெற்றுள்ளோம் எனவும் அதேநேரம் அதற்குரிய பொறுப்புக்களையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். ஆந்த பொறுப்புகளிலிருந்து விடுபட நினைக்கும் மனிதன் தனக்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றான் என்றார். சாத்தரின் கருத்துக்களிலிருந்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டவராக பூக்;கோ விளங்குகின்றார். பூக்கோவின் கருத்தில் மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் என்றார். அறிவுலகமானது தனியுலகமாக நின்று மனித விமோசனத்திற்கு வெளிச்சம் காட்டவில்லை. முhறாக அது அதிகார உலகுடன் கைகோர்த்து நின்று மனிதர்களை விலங்கிட்டு வைத்திருக்கின்றது என்றார். அதிகாரமும் சுதந்திரமும் ஒன்றையொன்று விலக்கிக் கொண்டு ஒன்றையொன்று எதிர்த்து நிற்பதில்லை. இது மிகவும் சிக்கலான விளையாட்டு. அந்த விளையாட்டில் சுதந்திரம் என்பது அதிகார இருப்புக்கான ஒரு நிபந்தனையாக உள்ளது என்றார். மனிதனின் சிந்தனை, தெரிவு, விருப்பம், அடையாளம் என அனைத்துமே அதிகாரத்தின் உரையாடலால் தீர்மானிக்கப்படுகின்றன. தெரிவு கூட கட்டமைக்கப்பட்ட வரையறைக்குள் அமைந்ததேயன்றி சுதந்திரம் என்பது அவனுக்கு இல்லை என்கிறார். எனவே இவ்விரு வேறுபட்ட கருத்துக்களின் தற்காலப் பொருத்தப்பாட்டை ஆராய்வதோடு சுதந்திரம் பற்றிய தெளிவுபடுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் இவ்வாய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வின் படி தனிமனிதனுடைய தேட்டத்தையும் அவனது விருப்பத்தையும் ஆதாரமாகக் கொண்டு ஆராய்கின்ற போது எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாத தேர்வுச் சுதந்திரம் மனிதனுக்கு அவசியமானதாகத் தோன்றுகின்றது. இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாத அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்ட சுதந்திரம் என்பது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது என்பதையும் வெளிப்படுத்துகின்றது. இந்த ஆய்விற்கான தரவுகள் நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. ஓப்பீட்டு முறை, பகுப்பாய்வு முறை, விபரணமுறை, எண்ணக்கரு பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject இருப்பு en_US
dc.subject இன்மை en_US
dc.subject தெரிவுச்சுதந்திரம் en_US
dc.subject அதிகாரம் en_US
dc.subject அறிவு en_US
dc.title ஜீன் போல் சார்த்தர் மற்றும் மிஷெல் பூக்கோவின் சுதந்திரம் பற்றிய சிந்தனைகளும் தற்கால உலகில் அவற்றின் பொருத்தப்பாடும். en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record