Abstract:
புகைப்படவியலின் ஒருவகையே தெருவோரப் புகைப்படவியலாகும். அது தெரு மற்றும் தெருசார்ந்த இடங்களில் இடம்பெறும் அன்றாட வாழ்க்கையைப் புகைப்படம் எடுப்பதாக அமைகின்றது. இதில் பல்வேறுபட்ட ஒழுக்கவியல் பிரச்சனைகளும் எழுகின்றன. ஒருவரின் அனுமதி இன்றிப் புகைப்படம் எடுத்தல்இ அவற்றைப் பதிவிடுதல்இ தனிஉரிமை மீறல்இ கலா சாரச் சீர்கேடுகள்இ இணையவழி மிரட்டல்கள்இ தவறான எண்ணம் மற்றும் அவற்றை தவறாக பயன்படுத்துதல்இ தொந்தரவாக இருத்தல் என்பன தெருவோரப் புகைப்படங்களில் இருக்கும் ஒழுக்கவியல் பிரச்சினைகள் ஆகும். யாழ்ப்பாணத்திலும் இத்தெருவோரப் புகைப்படவிய லானது வளர்ந்துவரும் துறையாக காணப்படுவதோடு அதிலும் மேற்குறிப்பிட்ட ஒழுக்கச் சிக்கல்கள் காணப்படுகின்றன. இப்பிரச்சினைகள் யாவும் யாழ்ப்பாணத் தெருவோரப் புகைப் படவியலில் எழுகின்றனவா அல்லது யார் இவ்வகையான தெருவோரப் புகைப்படங்களை எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் இவை ஒழுக்கவியல் சிக்கல்களாக எழுகின்றனவா என்பதை இவ்வாய்வு ஆராய்கின்றது. இவ்வாய்வுக்கான முதலாம் நிலைத் தரவுகள் அவதானித்தல் மூலமும் நேர்காணல் மூலமும் பெறப்பட்டன. இரண்டாம் நிலை தரவுகள் நூல்கள்இ சஞ்சிகைகள்இ ஆய்வேடுகள்இ ஆய்வுக் கட்டுரைகள்இ இணையதளக் கட்டுரைகள் போன்றன மூலமும் பெறப்பட்டுள்ளன. இவ் ஆய்வில் பகுப்பாய்வு முறைஇ ஒப்பீட்டு முறைஇ விபரண முறை ஆகிய முறைகள் பயன்படுத்தப்பட்டன. இவ் ஆய்வானது யாழ்ப்பாணத் தெருவோரப் புகைப்படத்தினால் எழும் ஒழுக்கவியல் பிரச்சினைகளைப் பட்டியற்படுத்துவதோடுஇ தெருவோரப் புகைப்படம் எடுப்பவர்களின் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு பற்றியும் ஆராய்கின்றது. யாழ்ப்பாண மக்கள் போர் சூழலினால் அதிகள வாகப் பாதிக்கப்பட்டதனால் அவர்கள் இத்தெருவோரப் புகைப்படவியலை மதிக்காத ஒரு சந்தர்ப்பமும் இருந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் தெருவோரப் புகைப்படவியலின் உள்ளடக்கத்தைக் காட்டிலும் யார் அத் தெருவோரப் புகைப்படங்களை எடுக்கின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவை ஒழுக்கவியல் சிக்கலாக நோக்கப்படுகின்றன என்பதனையும் அறியக்கூடியவாறு இருக்கின்றது. குறிப்பிட்ட ஒருவர் தன்னுடைய புகைப்படத்தை எடுக்க அனுமதி வழங்காவிட்டாலும் அதனை ஏற்கும் மனப்பாங்கினை தெருவோரப் புகைப்படக் கலைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்இ யாழ்ப்பாணத்தில் தெருவோரப் புகைப்படவியலிலிருக்கும் ஒழுக்கவியல் சிக்கல்களைக் குறைப்பதற்கு மங்களாக்குதல் (டீடரசiபெ) என்ற ஒரு விடயமும் முதன்மை யளிக்கின்றது. அனுமதி கேட்கும் நபரை மாத்திரமே நாம் புகைப்படம் எடுக்க முடியும் அப் புகைப்படத்தில் பின்னணியில் இருக்கும் நபர்களை நாம் மங்களாக்கம் செய்யமுடியும். இத்தகைய முடிவுகளை வெளிக்கொண்டு வருவதாக இவ் ஆய்வானது அமைகின்றது.
திறவுச்சொற்கள்: புகைப்படம் எடுத்தல்இ ஒழுக்கவியல் பிரச்சினைகள்இ தனியுரிமை மீறல்இ கலாசாரச் சீர்கேடுகள்இ சுரண்டல்.