dc.description.abstract |
வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு அம்மொழி பற்றிய சொற்கள், பண்பாடுகள், வரலாறுகள், கலை கலாச்சாரங்கள், சமயங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆய்வு காலத்திற்குக் காலம் செய்யப்படல் வேண்டும் என்பதை மறுக்க முடியாது. அவ்வகையில் இலங்கைத்தமிழ் ஆய்வுகள் பற்றி தொடர்ச்சியாக அறிஞர்களால் பேசப்பட்டு வந்தாலும், அதற்குரிய ஒரு அங்கீகாரம் இதுவரை முழுமையாக முன்வைக்கப்படவில்லை. அதுவும் குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுகள் இன்றும் பூரணமடையவில்லை எனலாம். தமிழ்மொழியிலுள்ள அகராதிகள் பெரிய, நீண்ட பாரம்பரியத்தையும், வரலாற்றையும் கொண்டமைந்தவையாகும். 1842இல் இருந்து தோன்றிய அகராதிகள் இன்று வரை பலவகையான மாற்றங்களுக்கூடாக வெவ்வேறு அகராதிகளாக பரிணமித்துள்ளன. குறிப்பாக இலங்கையில் உருவாக்கப்பட்ட பல அகராதிகள் தமிழின் செழுமையையும், சொற்களின் பொருளையும் புலப்படுத்தி வருகின்றன. அவ்வகையில் தமிழ்மொழியின் அகராதிகளில் சிறப்பாக க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி அனைவராலும் பாராட்டப்படும் ஒன்றாகும். அதே நேரம் யாழ்ப்பாண அகராதி, தமிழ் லெக்ஸிக்கன் போன்றவையும் இலங்கைத் தமிழிலுள்ள சொற்களை ஒன்றாக்கி பொருள் புலப்பட உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இச்சொற்கள் அனைத்தும் இவ்வகராதி உருவாக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதில் இன்றும் தெளிவற்ற ஒரு பார்வை காணப்படுகிறது. இதனாலேயே இந்த ஆய்வை வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய தேவை தற்காலங்களில் ஏற்பட்டு வருகிறது. |
en_US |