dc.description.abstract |
புராதன இந்து அரசியல் வாழ ;வில் ஒற ;றாடல் முறையே மனத்துக்கு மிக இன்னாத கூறாக
இருந்ததெனலாம். நாடாள்வோர் நாளும் தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணியாக
ஒற ;றையாளுதல் (ஒற்றரை ஆளுதல்) அமைகிறது. அரச நிர்வாக சுமூகமான
செயற்பாடுகளுக்கும் இராச்சிய விஸ்தரிப்புக்கும ; புலனாய்வுக் கட்டமைப்பானது, நாடு தழுவிய
ரீதியிலும ; நாடு கடந்த நிலையிலும் வலுப்பெற்றிருத்தல ; அவசியம் என்பதை மிகச் சிறந்த
அரசியற ; பனுவலான கொளடில்யரின் அர்த்தசாஸ்திரம் உட்பட ஏனைய இந்து
இலக்கியங ;களிலும ; வலியுறுத ;தப்பட்டுள்ளது. பிறர்பால் நிகழ ;வதை அவரறியாமல் மறைவாகத்
தெரிந்து கொள்ளுதல், மாற்று வேடம ; தாங்குதல், இரகசியம ; காத்தல், ஒற ;றியறிந்தனவற ;றை
ஐயுறாது தெளிதல், ஒற்றன் இன்னான் என அறியப்பட்டு தண்டம் விதித ;தாலும் உண்மை
உரைக்காமை, ஒற்றியறிதலுக்காக அனுப்பப்படும் ஒற்றனை பிறிதொரு ஒற ;றனால் அறிதல்
எனப்பல நிலைகளிலும் 'ஒற்றாடல்' அரசின் மிக முக்கியமானதொரு உறுப்பாக
அமைந்திருக்கின்றது. இத ;தகு முக்கியத்துவமுடைய அரசியற ; புலமான 'ஒற ;றாடல்' குறித்த
சிந்தனைகளை திருக்குறளினூடாக வெளிப்படுத ;த விளைவதாக இக்கட்டுரை அமைகிறது.
புராதன இந்து அரசியற ; பனுவல்களில் சிறப்புரைக்கப்பட்ட ஒற ;றாடல் பற ;றிய சிந்தனைகள்
திருக்குறளில் பொதிந்திருக்குமாற்றினை வெளிக்கொணர்தல் என்பதை நோக்கமாகக் கொண்டு,
விபரண ஆய ;வு முறையியல் மற்றும ; உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல் ஆகிய ஆய ;வு
முறையியலுக்கமைவாகவும ; சில சந்தர்ப்பங ;களில் ஒப்பீட்டு முறையியலும் பயன்படுத ;தப்பட்டு
இவ்வாய்வுக் கட்டுரையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. புராதன இந்து அரசியற ; பனுவலான
அர்த்தசாஸ்திரம் முதலான நூல்களில் சொல்லப்பட்ட ஒற ;றாடல் குறித்த செய்திகளைத்
திருக்குறள் உள்வாங்கி இருக்கிறது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். அரசின ;
ஸ்திரத்தன்மைக்கு புலனாய்வு வலைப்பின்னல் முக்கிய அங்கமாகும ;. இது குறித்த
சிந்தனைகள் திருக ;குறளில் சொல்லப்பட்டதானது புராதன இந்து அரசியல் செல்நெறியே
என்பது குறித்த ஆராய்ச்சியே, இவ்வாய்வின் ஆய ;வுப் பிரச்சினையாக எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |