Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2114
Title: திருமணமான தமிழ்ப் பெண்களின் தொழில் முன்னேற்றங்களைத் தீர்மானிக்கும் காரணிகள்
Authors: Shivany, S.
Keywords: திருமணமான தமிழ்ப் பெண்கள்;தொழில் முன்னேற்றங்கள்;தீர்மானிக்கும் காரணிகள்
Issue Date: 2019
Publisher: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Citation: Shivany, S. (2019). திருமணமான தமிழ்ப் பெண்களின் தொழில் முன்னேற்றங்களைத் தீர்மானிக்கும்காரணிகள் International Conference on Contemporary Management (ICCM 2019). The Faculty of Management Studies of University of Jaffna, held on July 29-30, 2019. Pages: 942-955.
Abstract: இன்றைய நாகரிக மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக பெண்கள் பங்களிப்புச் செய்யாத துறைகள் இல்லை என்னும் அளவுக்கு அவர்களுடைய செல்வாக்கும், ஈடுபாடும் ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. குடும்பப் பாரங்களைச் சுமந்து கொண்டு தொழில் சார்ந்து முன்னேறுவதென்பது திருமணமான பெண்களுக்கு சவாலாக காணப்படுகின்றது. இவர்கள் தமது தொழில் முன்னேற்றங்களில் வெற்றி காண்பதென்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை வட்டத்தில் திருமணம் என்பது மாற்றங்களை உருவாக்கக் கூடிய ஒரு மைல் கல்லாக அமைகின்றது. சட்டபூர்வமான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள திருமண பந்தத்திற்கு பின்னர் பெண்கள் தமது முன்னேற்றங்களைச் சீராகக் கொண்டு செல்வதற்கு பல காரணி;கள் தடையாக உள்ளன. பெண்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் திருமணமாகிய தமிழ்ப் பெண்கள் முழுமையாக தொழில் சார்ந்து முன்னேற்றம் கண்டுள்ளார்களா, அம் முன்னேற்றங்களைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை என்பது பற்றிய ஆய்வின் தேவைப்பாட்டை பூர்த்திசெய்துஆய்வு இடைவெளியினையும் குறைப்பதற்காக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.பனிப்பந்து மாதிரி எடுப்பினை அடிப்படையாகக் கொண்டு,யாழ் மாவட்டத்தில் கல்வித்துறையில் பணிபுரியும், திருமணமாகிய 30 தமிழ்ப் பெண்களிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டு, உட் பொருள் குறியீட்டு பகுப்பாய்வின் மூலம் 10 வகையான காரணிகள் அறிந்து கொள்ளப்பட்டன. ஆரம்ப நிலை குறியீட்டில் பெறப்பட்ட 65 குறியீடுகளையும் இரண்டாம் நிலை பகுப்பாய்வில் 24 குறியீடுகளையும்கொண்டு திருமணமாகிய தமிழ்ப் பெண்களின்; தொழில் முன்னேற்றங்களில் 10 காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன என அடையாளம் காணப்பட்டுள்ளன. அக் காரணிகளாவன ஏனைய குடும்ப அங்கத்தவர்களின் ஆதரவு, கணவரின் ஆதரவு, தங்கியிருப்போர்களின் எண்ணிக்கை,ன் தொழில் முன்னேற்றம் தொடர்பான சமூக மனப்பாங்கு,, ஆளுமை, உள நலன், கலாச்சாரம், சமூக விழுமியங்கள், குடும்பம் சார்ந்த கடமைகளும் பொறுப்புக்களும், தொழில்நிர்வாகக் கட்டமைப்பு என்பனவாகும். ஒரு சமூகத்தின் பெண்களின் தொழில் முன்னேற்றம் தொடர்பாக பெண்கள் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு செயற்பாடுகளை இவ் ஆய்வு பரிந்துரைக்கின்றது
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2114
Appears in Collections:Marketing



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.