Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12112| Title: | இலங்கையின் பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையிலான தொடர்பு |
| Authors: | Mary Delcia, A. |
| Keywords: | பணவீக்கவீதம்;வேலையின்மைவீதம்;பணநிரம்பல்;வட்டிவீதம்;பொருளாதாரவளர்ச்சி வீதம்;பிலிப்ஸ் வளையி;ARDL எல்லைச்சோதனை |
| Issue Date: | 2022 |
| Publisher: | Faculty of Arts University of Jaffna, Sri Lanka |
| Abstract: | பேரினப்பொருளியலின் பார்வையில் பொருளாதாரம் ஒன்றில் வேலையின்மை, பணநிரம்பல்,வட்டிவீதம், பொருளாதாரவளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியன மிக முக்கிய காரணிகளாக உள்ளன. இலண்டன் பொருளியலாளரான பிலிப்ஸ் தனது ஆய்வில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டு பிரதான மாறிகளுக்கிடையே குறுங்காலத்தில் எதிர்மறையான தொடர்பு காணப்பட்டது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆய்வின் நோக்கமானது, இலங்கையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு இடையிலான தொடர்பினை ஏனைய பிரதான மாறிகளான பணநிரம்பல், வட்டிவீதம் மற்றும் பொருளாதார வளர்ச்சிவீதம் ஆகியனவற்றுடன் தொடர்புபடுத்தி நோக்குவதாகவும், இலங்கைப் பொருளாதாரத்தில் பணவீக்கம் மற்றும் வேலையின்மையைச் சமப்படுத்துவதற்கான பொருத்தமான தீர்வினை முன்வைப்பதாகவும் அமைந்துள்ளது. பணவீக்கம் சார்பாக வேலையின்மை, பணநிரம்பல் மற்றும் வட்டிவீதம் ஆகியனவற்றின் பிற்செலவுக் குணகங்கள் 5% பொருண்மை மட்டத்தில் கணிசமானளவிற்கு வேறுபட்டமைவதுடன், பணவீக்கம் சார்பாக வேலையின்மை வீதத்தின் இணைபுக்குணகம் எதிர்மறையாகவும் உள்ளதனால் பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையே குறுங்காலத்தில் எதிர்க்கணியத் தொடர்பும், பணநிரம்பல் மற்றும் வட்டிவீதம் ஆகியனவற்றின் இணைபுக்குணகம் நேராக உள்ளதனால் பணநிரம்பல் மற்றும் வட்டிவீதத்திற்கு இடையே நேர்க்கணியத் தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கும் பொருளாதார வளர்சிக்கும் இடையே தொடர்பு காணப்படவில்லை. மேலும், பணவீக்கத்திற்கும் வட்டிவீதம் தவிர்ந்த ஏனைய மாறிகளுக்கும் இடையே நீண்டகால ரீதியில் தொடர்பு காணப்படவில்லை. பணவீக்கத்திற்கும் வட்டிவீதத்திற்கும் இடையே குறுங்காலத்திலும் நீண்டகாலத்திலும் நேர்க்கணியத் தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் அரை நூற்றாண்டு (1971-2020) காலப்பகுதிக்குரிய காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மாறிகளுக்கான அலகு மூலச்சோதனை செய்வதற்காக Augmented Dickey Fuller test (ADF) சோதனைமுறையும், குறுங்கால மற்றும் நீண்டகால தொடர்பினைச் சோதனையிடுவதற்காக Autoregressive Distributed Lag bounds test முறையும், வழுதிருத்த மாதிரியின் உறுதித்தன்மை மற்றும் தொடர் இணைபினைச் சோதிப்பதற்கு Breusch- Godfrey Serial Correlation LM Test, Heteroskedasticity Test: Breusch-Pagan- Godfrey, Ramsey reset Test, CUSUM மற்றும் CUSUMSQ முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் பணவீக்க வீதம் சார்ந்தமாறியாகவும், ஏனைய மாறிகள் சாராமாறியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இம்மாறிகளுக்கு இடையிலான தொடர்பு பற்றிய பிலிப்ஸ் எண்ணக்கரு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக, இலங்கையில் வேலையின்மைவீதம் குறுகிய காலத்தில் மட்டுமே பணவீக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீண்டகால ரீதியில் இவ்விரு மாறிகளுக்கு இடையில் எவ்வித தொடர்பும் காணப்படவில்லை. அதாவது, நீண்டகாலத்தில் வேலையின்மைவீதமானது பணவீக்கவீதம் மீது தாக்கம் எதனையும் செலுத்தவில்லை என முடிவு செய்யலாம். மேலும், இந்த ஆய்வானது பணவீக்கத்தைத் தீர்மானிப்பதில் வேலையின்மை முழுமையான பொறுப்புக் கூற முடியாது என்ற வகையில் பொருளாதார பல்வகைப்படுத்தலினைப் பரிந்துரை செய்கின்றது. பூரணமாக வளர்ச்சியடைந்த மற்றும் திறந்த சந்தைப் பொருளாதார செயற்பாடுகள் இடம்பெறாமல், அரசாங்கத்தினாலும் கொள்கை வகுப்போரினாலும் பொருளாதார நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுவதனால் இது இடம்பெற்றிருக்கலாம். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கோட்பாட்டு ரீதியிலான காரணிகளுக்கு மேலாக பல்வேறு காரணிகள் பணவீக்கத்தைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துவதனால் இனிவரும் ஆய்வுகள் அவற்றை மையப்படுத்தி அமைவது நல்லது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12112 |
| Appears in Collections: | 2022 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| இலங்கையின் பணவீக்கத்திற்கும் வேலையின்மைக்கும் இடையிலான தொடர்பு.pdf | 571.15 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.