DSpace Repository

அஷ;டப் பிரகரணம் கூறும் சைவசித்தாந்தக் கோட்பாடும் அற ஒழுக்கச் சிந்தனைகளும் - சத்தியோஜோதியை அடிப்படையாகக் கொண்டது.”

Show simple item record

dc.contributor.author Kalaivani , R.
dc.date.accessioned 2014-12-18T10:31:42Z
dc.date.accessioned 2022-06-28T03:15:15Z
dc.date.available 2014-12-18T10:31:42Z
dc.date.available 2022-06-28T03:15:15Z
dc.date.issued 2012-08-04
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/752
dc.description.abstract இந்த ஆய்வுக்கட்டுரை அஷ;டப்பிரகரண சைவசித்தாந்த நூல்கள் என்ற தொகுப்பிலே காணப்படும் எட்டு நூல்களில் தத்துவ சங்கிரகம், தத்துவத்திரயநிர்ணயம், போககாரிகை, மோட்சகாரிகை, பரமோட்ச நிராசகாரிகை என்னும் ஜந்து நூல்களில் காணப்படும் சைவசித்தாந்தக் கோட்பாட்டு வளர்ச்சியினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. சத்தியோஜோதி சிவாச்சாரியார் இந்த ஜந்து நூல்களின் ஆசிரியராவார். ஏனைய மூன்று பிரகணங்களான தத்துவப்பிரகாசம் இரத்தினத்திரயம் நாதகாரிகை ஆகிய நூல்களின் சிந்தனைகள் இந்த ஆய்விலே தேவைக்கேற்ப ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அந்தவகையில் வடமொழி அஷ;டப்பிரகரண நூல்களில் வளர்ச்சியடைந்துள்ள சைவசித்தாந்த சிந்தனைகளை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்துவதாக இந்த ஆய்வு அமைகின்றது. கி.பி 9 ஆம் நூற்றாண்டிலே எழுந்த அஷ;டப்பிரகரண சித்தாந்த நூல்கள் முதன்முதலில் முறைப்படுத்தப்பட்ட தரிசனவியல் என்ற மதிப்பினைச் சைவசித்தாந்தத்திற்கு ஈட்டிக்கொடுத்துள்ளன. இவ்வகையில் இந்த ஆய்வின் முதலாம் இரண்டாம் இயல்களில் வடமொழிநூல்களில் காணும் சைவசித்தாந்த வரலாறும், அஷ;டப்பிரகரண சித்தாந்த நூல்களின் தொகுப்புமுறை, காலம், நூலாசிரியர்கள் அதன் உரையாசிரியர்கள் பற்றிய செய்திகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் நான்காம் இயல்களில் அஷ;டப்பிரகரண தொகுப்பிலே சத்தியோஜோதி சிவாச்சாரியாரின் நூல்களில் விளக்கப்பெறும் பதிக்கோட்பாடு, பாசம், முத்திக்கோட்பாடு என்பனவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இறுதியாகவுள்ள இயலில் சித்தாந்தக் கோட்பாடு கூறும் அறஒழுக்கச் சிந்தனைகள் பற்றிப் பொதுவாகவும் அஷ;டப்பிரகரண நூல்களில் சிறப்பாகவும் கூறப்படும் கருத்துக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. “அஷ;டப்பிரகரணம் கூறும் சைவசித்தாந்தக் கோட்பாடும் அற ஒழுக்கச் சிந்தனைகளும் -சத்யோஜோதியை அடிப்படையாகக் கொண்டது.” என்ற இவ்வாய்வின் மூலம் வடமொழியிலமைந்த அஷ;டப்பிரகரண நூல்கள் தரும் சைவசித்தாந்த சிந்தனைகள் விளக்கப்படுகின்றன. சிறப்பாக சத்தியோஜோதி சிவாச்சாரியாரது ஆக்கங்களாகிய Iந்து அஷ;டப்பிரகரண சித்தாந்த நூல்கள் தரும் சைவசித்தாந்த சிந்தனைகள் அத்தத்துவக் கோட்பாட்டின் விளக்கத்திற்கு உதவும் வகை பற்றி ஆராயப்பட்டுள்ளதோடு அத்துறை பற்றிய விரிவான விளக்கத்தினை பெறும் வகையில் ஏனைய மூன்று அஷ;டப்பிரகரண நூல்களின் கருத்துக்கள் தேவைகருதி இவ்வாய்வில் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. சிவாகமங்களின் ஞானபாதச் சிந்தனைகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அமையும் அஷ;டப்பிரகரண நூல்கள் சைவசித்தாந்தக் கோட்பாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சைவசித்தாந்தக் கோட்பாட்டினை வடமொழியில் அமைந்த இந்நூல்கள் எவ்விதம் ஒழுங்குபடுத்தியுள்ளன என்பது இவ்வாய்வின் முக்கிய அம்சமாகும். en_US
dc.language.iso en en_US
dc.title அஷ;டப் பிரகரணம் கூறும் சைவசித்தாந்தக் கோட்பாடும் அற ஒழுக்கச் சிந்தனைகளும் - சத்தியோஜோதியை அடிப்படையாகக் கொண்டது.” en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record