DSpace Repository

கனிஷ;ட இடைநிலைமட்ட விஞ்ஞான ஆசிரியர்களிடையே விஞ்ஞான செயன்முறைத்திறன்கள் பற்றிய புலக்காட்சி (யாழ். மாவட்ட விஞ்ஞான ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Show simple item record

dc.contributor.author Baskaran , K.
dc.date.accessioned 2014-12-18T09:52:50Z
dc.date.accessioned 2022-06-28T03:15:14Z
dc.date.available 2014-12-18T09:52:50Z
dc.date.available 2022-06-28T03:15:14Z
dc.date.issued 2012-04-18
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/739
dc.description.abstract யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் கனிஷ;ட இடைநிலை வகுப்புக்களில் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களிடையே விஞ்ஞான செயன்முறைத்திறன்கள் தொடர்பான புலக்காட்சி எவ்வாறுள்ளது என்பதனை அறியும் நோக்கிலான இந்த ஆய்வானது (1) விஞ்ஞான செயன்முறைத்திறன்கள் தொடர்பான ஆசிரியர்களது மனப்பாங்குகள்> நம்பிக்கைகள்> கருத்துக்கள் யாவை? (2) விஞ்ஞான செயன்முறைத்திறன்களை விருத்தி செய்தல் தொடர்பாக ஆசிரியர்கள் எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்? ஆகிய ஆய்வு வினாக்களுக்கு விடை காண்பதனைக் குறிக்கோள்களாகக் கொண்டதாகும். கனிஷ;;;;ட இடைநிலை வகுப்புக்களில் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களில் இருந்து> படை கொண்ட எழுமாற்று மாதிரிமுறை மூலம் தெரிவு செய்யப்பட்ட 212 ஆசிரியர்களிடமிருந்து வினாக்கொத்துக்களுக்கூடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட இத் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதனூடாக இனம் காணப்பட்ட 40 ஆசிரியர்கள் அரை அமைப்பாக்கம் செய்யப்பட்ட நேர்காணல் பத்திரம் மூலம் நேர்காணல் செய்யப்பட்டனர். அவர்களது வகுப்பறைச் செயற்பாடுகள் சரியீட்டுப் பட்டியல்> அவதானிப்புப் பத்திரம் ஆகிய கருவிகள் கொண்டு அவதானிக்கப்பட்டன. தரவு சேகரிப்புக் கருவிகளினூடாக சேகரிக்கப்பட்ட தரவுகள் பால்> வயது> கற்பித்தல் அனுபவம்> பாடசாலை வகை ஆகியவற்றின் அடிப்படையில் X2 சோதனை மூலம் புள்ளிவிபரவியற் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டன. அதே வேளை வேண்டிய இடங்களில் இடைப்பட்ட பெறுமானங்களும் கணித்தறியப்பட்டன. ஆசிரியர்கள்> விஞ்ஞானம் கற்பித்தலில் விஞ்ஞான செயன்முறைத்திறன்கள் முக்கியத்துவமுடையன என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். விஞ்ஞான செயன்முறைத்திறன்கள் பற்றிய தெளிவு> ஆய்வுகூட செயற்பாடுகளைத் திட்டமிடல்> விஞ்ஞானம் கற்றல் கற்பித்தலில் நவீன கோட்பாடுகள் பற்றிய அறிவு> விஞ்ஞான செயன்முறைத் திறன்களின் பயன்பாடுகள் பற்றிய தெளிவான விளக்கம் போன்ற காரணிகள் விஞ்ஞான செயன்முறைத் திறன்களின் விருத்தியில் செல்வாக்கு செலுத்துவதாக ஆய்வின் பெறுபேறுகள் வெளிக்கொணர்ந்துள்ளன. ஆயினும் விஞ்ஞான செயன்முறைத் திறன்களினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதில்லை என்பதனையே ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. en_US
dc.language.iso en en_US
dc.publisher M.Phil. in Education en_US
dc.title கனிஷ;ட இடைநிலைமட்ட விஞ்ஞான ஆசிரியர்களிடையே விஞ்ஞான செயன்முறைத்திறன்கள் பற்றிய புலக்காட்சி (யாழ். மாவட்ட விஞ்ஞான ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record