DSpace Repository

சைவசித்தாந்த மற்றும் பௌத்த மெய்யியல்களில் குறிப்பிடப்படு ஒழுக்கவியல் கருத்துக்கள் ஒர் ஒப்பீட்டாய்வு.

Show simple item record

dc.contributor.author Poologanathan, P.
dc.date.accessioned 2021-04-20T09:34:44Z
dc.date.accessioned 2022-06-29T06:55:18Z
dc.date.available 2021-04-20T09:34:44Z
dc.date.available 2022-06-29T06:55:18Z
dc.date.issued 2019
dc.identifier.issn 2448-9204
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2603
dc.description.abstract இந்தியாவில் தோற்றம் பெற்ற தத்துவங்களில் வேத உபநிடதங்களை ஏற்று அவற்றை அடிப்படையாக கொண்டவை வைதீக நெறிகள் எனவும் அவற்றை ஏற்காதவை அவைதீக நெறிகள் எனவும் குறிப்பிடுவர். சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் போன்றவை வைதீக தத்துவங்கள் என்றும் பௌத்தம், சமணம், உலகாயுதம் போன்றவை அவைதீக தத்துவங்கள் எனவும் அழைப்பர். இவற்றுள் இறுதி நிலைப்பட்டதாகவும் சிறந்த முறையியல்சார் அமைப்பைக் கொண்டதாகவும் சைவசித்தாந்தம் விளங்குகின்றது. சைவசித்தாந்தம் என்பது சைவத்தின் முடிந்த முடிபைக் கூறுவதென்று பொருள் கொள்வர். இது முப்பொருள் உண்மையை காரணகாரிய அடிப்படையில் நிறுவுகின்ற மெய்யியலாக விளங்குகின்றது. சைவசித்தாந்தம் தனக்கான தோற்ற வேரினை வேதகாலத்திலிருந்து கொண்டிருந்தாலும் தெளிவான கருத்தமைவுகளை பன்னிரு திருமுறைகளிலும் மெய்கண்டசாத்திரங்களிலும் கண்டுகொள்ளலாம். சைவசித்தாந்தமானது ஒரு முழுமை பெற்ற தருக்கியல் அமைப்பிற்குட்பட்ட மெய்யியலாக இன்றுவரை நிலைத்து நிற்கின்றது. பௌத்த மெய்யியலானது வேத உபநிடதங்களை நிராகரித்து அக்கால சடங்கு முறைகளில் வெறுப்புக் கொண்டனவாகவும், நிலையாமைத் தத்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்டதொன்றாவும் காணப்பட்டது. வேத உபநிடத கருத்துக்களுக்கு எதிர் நிலையானதும் மற்றும் நிலையாமை தத்துவத்தைக் கொண்டு காணப்படுகின்ற பௌத்தம் குறிப்பிடும் ஒழுக்கவியல் குறித்த கருத்தமைவானது ஏனைய வைதீக தத்துவங்கள் கூறுகின்ற ஒழுக்கவியல் கோட்பாடுகளோடு நுணுக்கமாக ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய நிலைப்பாடுடையதாக காணப்படுகின்றது. ஒழுக்கம் என்பது அறம், நெறி, தர்மம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் வழி நடப்பதனால் விடுதலை கிடைக்கும் என்பது சைவசித்தாந்த பௌத்த மெய்யியல்களின் பொதுவான கருத்தாகும். இவ்வாறு இரண்டு தத்துவங்களும் ஒழுக்கவியல் பற்றிய கருத்தை குறிப்பிடும் அதேவேளை இரண்டினதும் இறுதி இலக்கான விடுதலை என்ற நோக்கில் ஒன்றாகவே காணப்படுகிறது. எனவே சைவசித்தாந்தம் குறிப்பிடும் ஒழுக்கவியல் கோட்பாட்டிற்கும் பௌத்தம் குறிப்பிடும் ஒழுக்கவியல் கோட்பாட்டிற்குமிடையே மிக ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியதுமான ஒற்றுமைப்பாட்டுகள் இடம்பெறவே செய்கின்றன. ஆகவே சைவசித்தாந்தத்தினதும் பௌத்தத்தினதும் வாழ்வியல் வடிவமைப்புக்களும் இலக்குகளும் ஒழுக்கக்கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு ஏகபாதையிலே பயணிக்கிறது என்பதனையும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே விடுதலை கிடைக்கும் என்பதனையும் வெளிக்கொணர்தல் வேண்டும் எனும் நோக்கில் சில முதல்நிலை இரண்டாம் நிலைத் தரவுகளையும் அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு முறை, ஒப்பீட்டாய்வு முறை ஆகிய முறைகளினூடாக இவ்வாய்வு பூரணப்படுத்தப்படுகிறது.
dc.language.iso en en_US
dc.publisher South Estern University of Sri Lanka en_US
dc.subject பௌத்தம் en_US
dc.subject சைவசித்தாந்தம் en_US
dc.subject ஒழுக்கவியல் en_US
dc.subject இல்லறம் en_US
dc.subject விடுதலை en_US
dc.title சைவசித்தாந்த மற்றும் பௌத்த மெய்யியல்களில் குறிப்பிடப்படு ஒழுக்கவியல் கருத்துக்கள் ஒர் ஒப்பீட்டாய்வு. en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record