DSpace Repository

நவீன மெய்யியலில் உடல்-உளம் பற்றிய பிரச்சனைக்கான தீர்வில் தறுவாய்க் கோட்பாடு, முன்னமைந்த பொருந்தக் கொள்கை என்பவற்றின் பங்களிப்பு - ஒர் விமர்சன ரீதியான பகுப்பாய்வு.

Show simple item record

dc.contributor.author Poologanathan, P.
dc.date.accessioned 2021-04-20T06:07:21Z
dc.date.accessioned 2022-06-29T06:55:19Z
dc.date.available 2021-04-20T06:07:21Z
dc.date.available 2022-06-29T06:55:19Z
dc.date.issued 2015
dc.identifier.isbn 978-955-1443-79-5
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2549
dc.description.abstract மெய்யியற் பிரச்சினைகளில் ஒன்றான உடல்-உளம் தொடர்பான பிரச்சினைக்கு தறுவாய்க் கோட்பாடும், முன்னமைந்த பொருத்தக் கொள்கையும் எவ்வகையில் பங்களிப்பு வழங்கியுள்ளது என்பதனை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. வேறுபட்ட பண்புகளைக் கொண்டமைந்த உடல்-உளம் ஆகிய இரண்டும் எவ்வாறு ஒன்றினையொன்று செயற்படுத்த முடியும்? எனும் வினா கிரேக்கம் முதல் மெய்யியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் இது பற்றிய தீவிர ஆராய்ச்சி 17ம்நூற்றாண்டிலேயே ஆரம்பமாகின. இக்காலத்தில் உடல்-உளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல கோட்பாடுகள் தோற்றம் பெற்றிருப்பினும் தறுவாய்க் கோட்பாடும் முன்னமைந்த பொருத்தக் கொள்கையும் இப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய சிறந்த இரு விளக்கங்களாக அமைந்துள்ளன. உடல்-உளம் இரண்டினையும் வேறுபடுத்தி இருமைவாதத்தை நிறுவிய டேக்காட் அவை எவ்வாறு ஒன்றினையொன்று செயற்படுத்தமுடியும்? எனும் பிரச்சினைக்கு சரியான தீர்வினை முன்வைக்கவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக கெலிங்ஸ், மால்ப்பிரான்ஸ் எனும் அறிஞர்களால் தறுவாய்க்கொள்கை முன்வைக்கப்பட்டது. இதன்படி பண்பிலே வேறுபட்ட உடல்-உளம் ஆகிய இரண்டும் ஒன்றினையொன்று செயற்படுத்த முடியாது. இவற்றின் செயற்பாட்டிற்கு கடவுளை மூல காரணமாக குறிப்பிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டனர். பின்னர் ஸ்பினோசா உடல்-உளப் பிரச்சினைக்கு ஒருமைவாதக் கோட்பாட்டை முன்வைத்து உடல்-உளம் இரண்டும் கடவுளின் இரு இயல்புகள் எனவும் கடவுளே அவற்றின் இயக்கத்தை தீர்மானிக்கின்றார் என்றார். இக்கருத்தினை நிராகரித்த லைப்பினிஸ்ட் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் மொனாடுகளாகக் குறிப்பிட்டு இவ்மொனாடுகளின் செயற்பாடுகள் ஏற்கனவே கடவுளால் முன்னதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது எனும் முன்னமைந்த பொருத்தக் கோட்பாட்டினை முன்வைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுகின்றார். உடல்-உளம் தொடர்பான மெய்யியற் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கடவுளை மையப்படுத்தியதாக தோன்றிய இவை எவ்வாறு இப்பிரச்சினைக்கு தீர்வுகான முயல்கின்றது என்பதனையும், இக்கோட்பாடுகள் மேற்படி பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வுகளாக அமைகின்றதா? என்பதனைக் கண்டறிவதற்காகவும் இருகோட்பாடுகளையும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்வதனை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கினை அடைவதற்கு பகுப்பாய்வு முறை, விமர்சன முறை என்பன பயன்படுத்தப்படுவதோடு இது தொடர்பான தரவுகள் இலக்கிய ஆய்வுகள் மூலம் பெறப்பட்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.
dc.language.iso other en_US
dc.publisher Estern University, Sri Lanka. en_US
dc.subject உடல் en_US
dc.subject உளம் en_US
dc.subject மொனாடு en_US
dc.subject கடவுள் en_US
dc.subject ஒருமை en_US
dc.subject வாதம் en_US
dc.subject பதார்த்தம் en_US
dc.title நவீன மெய்யியலில் உடல்-உளம் பற்றிய பிரச்சனைக்கான தீர்வில் தறுவாய்க் கோட்பாடு, முன்னமைந்த பொருந்தக் கொள்கை என்பவற்றின் பங்களிப்பு - ஒர் விமர்சன ரீதியான பகுப்பாய்வு. en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record