DSpace Repository

நூலகத்தில் தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஒழுங்கமைத்தலும் நடைமுறைச் சிக்கல்களும் : தூயி தசமப் பகுப்பாக்கத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.

Show simple item record

dc.contributor.author Visakaruban, M
dc.contributor.author Navaneethakrishnan, S.
dc.date.accessioned 2019-01-28T05:41:11Z
dc.date.accessioned 2022-06-29T06:55:18Z
dc.date.available 2019-01-28T05:41:11Z
dc.date.available 2022-06-29T06:55:18Z
dc.date.issued 2016
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/1214
dc.description.abstract நூலகம் ஒன்றிற்குரிய தகவற் சாதனங்களைச் சேகரித்தலில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அச்சாதனங்களை நூலகங்களிலே ஒழுங்கமைத்து வைக்கும் போது அதனிலும் கூடிய கவனம் தேவைப்படுகிறது. நேர்த்தியான பகுப்பாக்கம் மூலமே நூல்கள் பூரணமாக பயன்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படும். சரியாகப் பகுப்பாக்கம் செய்யப்படாதவிடத்துக் குறிப்பிட்ட விடயம் சார்ந்த நூலை நூலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள அதிக நேரம் செலவாகும். நூலகத்தில் தவறான இடத்தில் அமைவுபெறும் நூல் தொலைந்த நூலுக்கு ஒப்பானதாகக் கருதப்படக்கூடியது. ஒத்த பாடத்துறைகள் யாவற்றையும் ஓரிடப்படுத்தி, ஒழுங்கமைத்து வைத்துக்கொள்வதுதான் தகவற் சாதனங்களின் பூரண பயன்பாட்டிற்குரிய ஒரே வழிமுறையாகும். தகவற் சாதனங்கள் பலவுள்ளன. அவற்றுள் தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்குரிய தேவையும், முக்கியத்துவமும் தனித்துவமானவை. இவை நூலகத்தின் உசாத்துணைப் பகுதியில் வாசகர்கள் இலகுவாக இனங்கண்டு பயன்படுத்தக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுவது அதிக நன்மையுடையது. நூலகங்களின் தகவற் சாதன ஒழுங்கமைப்பிற்கு இலங்கையில் பயன்படும் திட்டமாக ‘தூயி தசமப் பகுப்பாக்கத்திட்டம்’ உள்ளது. இத் திட்டத்திலே வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பகுப்பாக்கம் செய்வது தொடர்பான இடவமைவுகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை நுணுகி ஆராயும் போது குறிப்பிட்ட ஒரு நூலை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இறாக்கைப்படுத்தக்கூடிய குழப்பமான தன்மை காணப்படுகிறது. இதன்படி ஒரே பாடத்துறைகளை ஒன்றிணைத்து வைப்பதற்கு வழிப்படுத்துகின்ற தன்மையில் தூயி தசமப் பகுப்பாக்கம் தெளிவான அறிவுறுத்தல்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் அது தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஒழுங்கமைக்கும்போது இனங்காணப்படுகிறது என்பதும் உணரப்படுகின்றது. இதனை விளங்கவைப்பதை நோக்கமாகக் கொண்ட இவ் ஆய்விலே ஒப்பீட்டு ஆய்வு முறையியல் மற்றும் விளக்கவியல் ஆய்வு முறையியல் என்பன பயன்படுத்தப்படுகின்றன. பல பதிப்புக்களாக வெளிவந்துள்ள தூயி தசமப் பகுப்பாக்கத்தின் 23வது பதிப்பு ஆய்வுக்காகப் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு ஒரு விடயம் சார்ந்து பல இட அமைவுகளைக் காட்டுகின்ற தூயி தசமப் பகுப்பாக்கத்தின் போக்கினை அதன் துணையோடு, தீர்க்கமானதொரு அதிகாரக் கோவையைத் தயாரித்துப் பேணுவதன் மூலம் குழப்பமற்ற வகையில் தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களைச் சீராக ஒழுங்கமைத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வின்மூலம் பெறப்படும் முடிவாகும். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Management studies and Commerce University of Jaffna en_US
dc.subject நூலகவியல் en_US
dc.subject பகுப்பாக்கம் en_US
dc.subject தகவல்சாதனங்கள் en_US
dc.title நூலகத்தில் தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஒழுங்கமைத்தலும் நடைமுறைச் சிக்கல்களும் : தூயி தசமப் பகுப்பாக்கத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு. en_US
dc.type Other en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record