dc.description.abstract |
ஆசிரியர்கள் தமது விடயம்சார் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் வினைத்திறன் மிக்க கற்பித்தலை மேற்கொள்வதற்குமான தகவல் தேவையை ”ர்த்திசெய்து கொள்வதற்கு தகவல் தேடல் திறன்களைக் பெற்றிருப்பது பயனுள்ளதாகும். ஆசிரியர்கள் தகவல் தேடல் திறன்களை கொண்டுள்ளனரா, எவ்வளவு தூரம் அதில் நாட்டம் கொண்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்வது பொருத்தமானதாகும். இதற்காக குறித்த தரப்பினரின் தகவல் தேடல் நடத்தைக் கோலங்கள் பற்றி அறியப்பட்டிருத்தல் வேண்டும். அந்தவகையில், கல்வித்துறை சார்ந்த, யாழ்ப்பாணக் கல்வி வலயத்தைச் சேர்ந்த 1AB பாடசாலைகளில் பணியாற்றும் க.பொ.த. (உ/த) விஞ்ஞான பாட ஆசிரியர்களின் தகவல் தேடல் நடத்தைக் கோலங்கள் தொடர்பாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாசிரியர்கள் தகவல் தேடலை மேற்கொள்வதற்கான காரணங்கள், பயன்படுத்தும் தகவல் வளங்கள், தகவலைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள், மற்றும் தகவல் தேடலின்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பவற்றை கண்டறிவதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். அதற்காக அளவைநிலை ஆய்வுமுறையியல் பயன்படுத்தப்பட்டது. தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுக் குடித்தொகையினர் மத்தியில் ஆய்வாளரினால் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தின் மூலம் ஆய்வுக்கான தகவல்கள் திரட்டப்பட்டு, கணித புள்ளிவிபரவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகள் எட்டப்பட்டன. இவ்வாய்வில், 56.6%மான வினாக்கொத்துக்கள் ”ர்த்திசெய்து சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வுக்குடித்தொகையினர் அனைவரும் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர். இவர்களுள், 76.67%மானோர் தொழிற்தகைமையையும் பெற்றிருந்தனர். கற்பித்தல் தேவை, வாண்மை விருத்தி, உடனடித் தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் என்பன தகவல் தேடலுக்கான பிரதான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. அத்துடன், இவ்வாய்வுக் குடித்தொகையினர் அதிகளவில் பயன்படுத்தும் தகவல் வளங்களாக ஆசிரியர் கைந்நூல்கள், பாடநூ
ல்கள், உசாத்துணை நூல்கள், சகஆசிரியர்களுடனான கலந்துரையாடல், இலத்திரனியல் தகவல் சாதனங்கள் என்பன விளங்கின. மேலும், ஆய்வுக் குடித்தொகையில் தமிழ் மொழி மூலம் கற்பிப்பவர்களின் எண்ணிக்கை (n=40, 66.67%) அதிகமாக இருந்த போதிலும், ஆங்கிலத்திலேயே தகவல் தேடலை மேற்கொள்வதாக பெரும்பாலானோர் குறிப்பிட்டிருந்தனர். விஞ்ஞானம் சார்ந்த உடனடித் தகவல்களை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதிலுள்ள இடர்பாடே இதற்கான பிரதான காரணமாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தகவல் தேடலை மேற்கொள்வதற்கு உகந்த இடங்களாக பாடசாலை நூலகம் (78.33%), வீடு (70%), இணைய நிலையம் (55%) என்பன குறிப்பிடப்பட்டன. தகவல் தேடலில் இணையப் பாவனை (83.33%) முதலிடத்தை வகிப்பதுடன், இலத்திரனியல் ஊடகம் (96.66%) முன்னிலை வகிக்கிறது. மேலும், தகவல் தேடலில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக நேரம் போதாமை, வேலைப்பழு, தகவல் வளங்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் காணப்படல், தேடும் தகவல் வளங்கள் கிடைக்கப்பெறாமை என்பன முன்வைக்கப்பட்டன. இவ்வாய்வானது, பாடசாலை ஆசிரியர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினராகிய விஞ்ஞான ஆசிரியர்களின் தகவல் தேடல் நடத்தைக் கோலங்கள் பற்றி விபரிப்பதுடன், அவர்களது தகவல் தேவைகளையும் இனம்காண உதவியுள்ளது. |
en_US |