Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8716
Title: நடப்பியல்' - ஓர் அறிமுகம்
Authors: Visakaruban, K.
Issue Date: 2004
Publisher: University of Jaffna
Abstract: தமிழ் இலக்கிய வடிவங்களில் 'நாவல்' (Novel) என்பது கணிசமான செல்வாக்கு உடைய ஒரு இலக்கிய வடிவமாக உருவெடுத்து வருகிறது. மனித வாழ்க்கையினை அதன் பலம், பலவீனங்களோடு புரிந்துகொள்ள பிற கலை வடிவங்களைவிட நாவலிலேயே அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகக் கருதலாம். மனிதர்கள் தாம் வாழும் சூழல்களில் இயங்கும் முறையை அப்படியே சித்திரித்துக் காட்டும் பொழுதுதான் குறித்த நாவலை நுகர்கின்ற வாசகனுக்கும் அது உண்மையானதாகப்படும். படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களில் நடப்பியல் நெறிகளை உள்வாங்கிப் படைக்கும் போதுதான் மேற்குறித்த நிலை சாத்தியம் ஆகும். நடப்பியல் நெறி களை உள்வாங்கி நாவல்களைப் படைக்கும் போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையானது நடப்பியலுக்கான விளக்கம், நடப்பியலின் தோற்றம், நடப்பியலின் அடிப்படையான பொதுப்பண்புகள், நடப்பியல் வகைகள் முதலான கூறுகளை விளக்குவதனூடே நடப்பியலை அறிமுகம் செய்வதாக அமைகிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8716
Appears in Collections:2004 MARCH ISSUE 1 Vol XV

Files in This Item:
File Description SizeFormat 
நடப்பியல்' - ஓர் அறிமுகம்.pdf6.81 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.