Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8692
Title: பண்டிதமணி ஆய்வில் ஆய்வில் எழும் சிக்கல்கள்
Authors: Susinthirarasa, S.
Issue Date: 1985
Publisher: University of Jaffna
Abstract: முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பண்டிதமணி சிற கணபதிப்பிள்ளையவர்கள் வரையறுத்துக் குறிப்பிடக் கூடிய ஒரு காலகட்டத்தில் தமது ஆசிரியப் பணியாலும், புலமை மிக்க எழுத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும் ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரி யத்திலே குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பாரம்பரியத்திலே தமிழ்க் கல்வி, கலாசாரம், சைவசமயம் ஆகிய துறைகளில் சுட்டிக்காட்டக்கூடிய அளவு ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்திச் சமுதாயத்தின் பெரும் மதிப் பைப் பெற்றிருந்தார் என்பதில் ஐயமில்லை. இம்மதிப்பை அறிந்து ஏற்றுக் கொண்ட இலங்கைப் பல்கலைக்கழகம் பண்டிதமணிக்கு இலக்கியக் கலாநிதி ப்பட்டம் அளித்தது. பண்டிதமணியின் பணியையும் எழுத்துக்களையும் முழுமையாக நோக்கும்போது அவர் உயர்நிலையில் ஆய்வுப் பொருளாகும் தகுதியுடையர் என்பதை யாரும் மறுத்தல் அரிதாம். பல்கலைக்கழக நிலையில் நடைபெறும் பண்டிதமணி ஆய்வு விருப்பு வெறுப்பற்றதாய் அறிவியல் அடிப்படையில் இயன்றளவு உலகளாவிய அறிஞர் கூட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மலர்தல் விரும்பத்தக்கது. அதற்கெனத் தக்கதோர் ' ஆய்வுநெறியைக் கடைப்பிடித்தலும் இன்றிய மையாததாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8692
Appears in Collections:1985 JULY, AUGUST ISSUE 2-3 Vol III



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.