Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8625
Title: கிறிஸ்தவ அறவியல் நோக்கில் லூயிஸ் டெசியின் 'நானே குற்றவாளி'
Authors: Mary Winifreeda, S.
Keywords: மறைக் கருத்துக்கள்;ஊடகம்;ஒப்புரவு;விழுமியங்கள்;உண்மையான மனமாற்றம்
Issue Date: 2021
Publisher: University of Jaffna
Abstract: கிறிஸ்தவத்தைத் தமிழ் பேசும் மக்களிடையே பரப்பிய மறைபரப்பாளர்கள் சாதாரண மக்களுக்கு புதிய கருத்துக்களை எடுத்துரைக்கும் சிறந்த ஊடகமாக நாடகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவியபோது கத்தோலிக்க மறையைப்பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்ட மறைபரப்பாளர்கள் தமிழ் மக்களிடையே சிறப்புற்று திகழ்ந்த நாட்டுக்கூத்துக் கலையை ஆரம்பத்தில் கையாண்டு, கிறிஸ்தவ மறைக் கருத்துக்களை பரப்பினர். காலப்போக்கில் மக்கள் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய உரைநடை நாடகங்களையும் தோற்றுவித்துள்ளனர். அவ்வாறு தோன்றிய நாடகங்கள் கிறிஸ்தவ மறைக்கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. இவ் ஆய்வானது ஐரோப்பிய குருவான அருட்திரு. லூயிஸ் டெசி அவர்களின் இலக்கியப் படைப்புக்களில் ஷநானே குற்றவாளி| என்ற நாடகத்தை மையப்படுத்தியுள்ளது. 1924 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த இவர், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மறைபணியாற்றிய காலத்தில் தமிழ் மொழியை நன்கு கற்று, தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியத் துறைக்குத் தனது பங்களிப்பையும், இலக்கியத்தினூடாக மறைக் கருத்துக்களை எடுத்துரைத்து மக்களிடையே மனமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார். அவர் எழுதிய ஷநானே குற்றவாளி| என்னும் நாடகமானது, உரைநடையில் 1964இல் வெளியிடப்;பட்டது. இந்நாடகத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்களாகக் காணப்படுவதுடன் ஆசிரியர் அதனை அறிமுகப்படுத்துகின்ற விதம் வரவேற்கத்தக்கது. நாடகத்தின் பிரதான பாத்திரமான கட்டளைக்குருவின் பொறுமையும், நேர்மையும், பிரமாணிக்கமான இறைப்பணியும் நாடகத்தில் சிறப்புற எடுத்துரைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருஅவையில் ஷஒப்புரவு| அருளடையாளத்தின் முக்கியத்துவத்தையும் அதனை வழங்கும் குருக்கள் அதன் இரகசியங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிலைத்திருத்தல் வேண்டும் என்பதையும் நாடகம் எடுத்துரைக்கின்றது. மேலும் பாவம் செய்தவர் உண்மையான மனமாற்றம் பெறுதலின் அவசியம் வலியுறுத்தியுள்ளது. கதைப்போக்கு துப்பறியும் நோக்கில் தொடர்வதால் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. அருட்திரு. லூயிஸ் டெசி அவர்கள் நாவல், சிறுகதை போன்ற பல இலக்கியப் படைப்புக்களைத் தோற்றுவித்துள்ளார். இவ் ஆய்வானது நாடகத்துறையில் அவரின் படைப்பாகிய ஷநானே குற்றவாளி| என்னும் நாடகத்தை மட்டுமே மையப்படுத்தியுள்ளது. அவரின் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கிய பங்களிப்பை வெளிக்கொணருதல், ஷநானே குற்றவாளி| நாடகம் வெளிப்படும் மறைக்கருத்துக்கள், சமகால பண்பாட்டு பின்னணியில் அது உணர்த்தும் விழுமியங்கள் என்பவற்றை எடுத்துரைத்தல் என்னும் நோக்கங்களை மையப்படுத்தி ஆய்வு மேற்கௌ;ளப்பட்டுள்ளது. ஆய்விற்கென தொகுத்தறிவு, பகுப்பாய்வு, உய்த்துணர் முறையியல்கள் கையாளப்பட்டுள்ளன. நாடக பிரதியிலிருந்து பெறப்படும் தரவுகள் ஆய்விற்கான முதலாம் நிலை தரவுகளாகவும் ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் அமைகின்றன. இவ் ஆய்வு தமிழ்க் கிறிஸ்தவ இலக்கிய பாரம்பரியத்தில் நாடக வடிவ இலக்கியங்களின் பயன்பாட்டையும் இந்நாடக ஆசிரியரின் ஆளுமை, மறைப்பற்று, மொழியாற்றல், கலைத்திறன் என்பவற்றையும் வெளிக்கொணர உதவுகின்றது என்பதில் ஐயமில்லை.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8625
ISBN: 978-624-5709-14-4
Appears in Collections:Christian & Islamic Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.