Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8496
Title: இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை
Authors: Velupillai, A.
Issue Date: 1984
Publisher: University of Jaffna
Abstract: இருபதாம் நூற்றாண்டு முற்பாதியிலே, இலங்கை யாழ்ப்பாணத்திலி ருந்து, ஆறுமுக நாவலர் மர பிலே, தமிழ்க் கல்விமான்களாகப் பிரகாசித்த பலருள், சுன்னாகம் குமார சுவாமிப் புலவரும், மகாவித்துவாள் கணேசையரும் ஈடிணையற்றவர்கள். ஆறுமுகநாவலரின் மருகரான வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையின் மாணவராக இருந்த கணேசையர் (1878 - 1958) பொன்னம்பலபிள்ளையின் மறைவின் பின் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணவரானார். உரையாசிரியர் மட்டுவில் க. வேற்பிள்ளை, காசி வாசி செந்திநாதையர் முதலியோரும் இவர் ஆசிரியராக விளங்கியவர்கள். இராகவையங்கார் என்ற பெயர் தாங்கிய அறிஞர்கள் இருவரும் வேண் டிக்கொண்டபடி, 'செந்தமிழ்' என்னும் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீட் டுக்ரூ, கணேசையர் நீண்டகாலமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிவந் தார். கணேசையரின் அறிவுவளர்ச்சியில், அவருக்குச் சுன்னாகம் பிராசீன பாடசாலையிலே, தலைமைத் தமிழாசிரியராகக் கிடைத்த பதவிக்காலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை ஒத்ததாக இலங்சையிலும் ஓர் அமைப்பு வேண்டு மென்ற அபிலாசை 1921 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 'ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்' என்ற அமைப்பு வித்தியாதரிசி யா. தி. சதாசிவ ஐயர் முயற்சியில் உரு வாகக் காலாயிற்று. அச்சங்கம் நடத்திய பண்டித, பாலபண்டித , பிர வேசபண்டிதத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்காகப் பிராசீன பாடசாலையொன்று அதே ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப் பாடசாலையிலே கணேசையர் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றிய காலம் எட்டாண்டுகளா , பதினோராண்டுகளா என்பதிலே கருத்து வேறு பாடு காணப்படுகிறது : கணேசையர் பதவி விலகிய பின்பும் தனிப்பட்ட முறையிலே, திண்ணைப் பள்ளிக்கூட அமைப்பிலே மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடஞ் சொல்லி வந்தாராதலின், அவர் கல்வி வளர்ச்சி தடைப்படவில்லை. பிராசீன பாடசாலையிலே, பாலக்காட்டிலிருந்து வந்த வேதவிசாரதர் சிதம்பர சாஸ்திரியுங் கடமையாற்றியதால், கணேசையர் சங்கதமொழி அறிவையும் விருத்திசெய்து கொண்டார். கணேசையரின் தமிழ்ப்பணிகள் பரந்துபட்டன. புலவர். வாழ்க்கை வரலாற்றாசிரியர், இலக்கிய உரையாசிரியர், இலக்கண ஆராய்ச்சியாளர் என்று பலவாறு வருணிக்கப்படத்தக்க முறையிலே. அவர் பணிகள் அமைந் தன. இலக்கண ஆராய்ச்சியாளர் என்ற முறையிலேயே, அவர் பெருஞ் இறப்பப் பெறுகிறாரெனலாம்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8496
Appears in Collections:1984 NOVEMBER ISSUE 3 Vol II



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.