Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8289
Title: யாழ்ப்பாணத்தில் பழப்பாகு தயாரிப்புகளில் தரநிர்ணய அளவீடுகள்
Authors: Pathmashani, K.
Christy Thavarangith, A.
Keywords: PH பெறுமானம்;பழப்பாகு;நுண்ணங்கிகள்;புலனுணர்ச்சி
Issue Date: 2015
Publisher: University of Jaffna
Abstract: யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் பழ வர்க்கங்களான வாழைப்பழம், முந்திரிப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம், தக்காளிப்பழம் போன்றன பழப்பாகு தயாரிப்பதற்கு ஏற்ற பழங்களாக விளங்குகின்றன. அவை போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும் தரமான சந்தைப்படுத்தல் வசதியின்மை காரணமாகவும் இங்கு உற்பத்தியாகும் பழங்களில் பெரும்பகுதி பயனற்றதாகின்றது. அத்துடன் பருவ காலங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களினாலும் அதிகமான பழ வர்க்கங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் உள்ளூர் வியாபாரிகள் பழங்கள் நன்றாகக் கனிவதற்கு முன்பே இரசாயனப் பதார்த்தங்களைப் பயன்படுத்தி அவற்றிற்கு நஞ்சேற்றுகின்றார்கள். பழங்கள் தானாக கனிவதற்கு முன்பே கனிவடைவதற்காவும் பழங்கள் பழுதடைவதைத் தாமதமடையச் செய்வதற்காகவும் இந்த இராசாயனப் பதார்த்தங்கள் ஏற்றப்படுகின்றன. இவ்வாறு நஞ்சேற்றப்படுகின்ற காரணத்தினால் யாழ்ப்பாணத்துப் பழங்கள் சந்தைப்படுத்தும் வாய்ப்பை இழந்து விடுகின்றன. இந்நிலையில் பழப்பாகு தயாரிக்கும் முறைகளில் உள்ள தடைகளான பழப்பாகு நொதிப்படைதல், பழப்பாகு திரவத்தன்மையடைதல், பழப்பாகு பளிங்குருவாகுதல், பழப்பாகு பெக்கரின் சேர்க்காவிடின் மென்மையடைதல் பழப்பாகு கலங்கல் தன்மையடைதல் போன்றவற்றை நீக்கும் முறையாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்களுக்கு ஒரு சிறந்த வீட்டுக் கைத்தொழிலை அறிமுகப்படுத்தும் முறையாகவும் பழப்பாகுகளைத் தயாரிக்கும் முறை பற்றி ஆராய்ந்துள்ளோம். நான்கு வகையான பழப்பாகு தயாரித்து புலனுணர்ச்சி மதிப்பீட்டின் மூலம் அவற்றின் இயல்புகளை ஒப்பிட்டு அறிவதும், தயாரிக்கப்பட்ட பழப்பாகு வகைளில் நுண்ண ங்கி தொழிற்பாடு (Methelene blue சாயநிறமற்ற முறை). pH அளவு Meter (PH Meter), வெல்லத்தின் அளவு (Refracto meter) போன்ற முறைகள் மூலம் கணிக்கப்பட்டு இழப்பழப்பாகு வகைகள் எவ்வளவு காலம் உபயோகப்படுத்தலாம். என எதிர்வு கூறலும் இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். நான்கு பழப்பாகுகளின் சுவை வேறுபட்டதாகவும் , PH இன் பெறுமானம் முதல் வாரத்திலும் ஆறாம் வாரத்திலும் ஒப்பிட்டு நோக்கும் போது அமிலத்தன்மை குறைவாகவும் காணப்பட்டது. அவதானிக்கப்பட்ட ஆறு கிழமைகளில் மாம்பழப்பாகில் ஆறாம் வார முடிவில் மொத்த வெல்லத்தின் அளவானது (9.0) ஏனைய பழப்பாகுகளுடன் ஒப்பிடும் போது அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் அப்பிள் பழப்பாகில் மொத்த வெல்லத்தின் அளவு (6.குறைவாகக் காணப்பட்டது. தயாரிக்கப்பட்ட முதல் கிழமை தக்காளிப்பழப்பாகில் மொத்த வெல்லத்தின் அளவு (4.0) குறைவாகக் காணப்பட்டது. தயாரிக்கப்பட்ட நான்கு பழப்பாகு வகைகளிலும் ஆறு வாரங்களிலும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டில் குறிப்பிடக்கூடியவாறு எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. பழப்பாகு தயாரிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து ஆய்வுக்காக வைக்கப்பட்ட இறுதி காலம் வரை (நான்கு மாதங்கள்) நுண்ணங்கிகளினால் பழப்பாகில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாமலும் பழுதடையாமலும் காணப்பட்டது. எனவே இப்பழப்பாகுகள் தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து நான்கு மாதங்கள் வரை பழுதடையாமல் இருக்கும் என எதிர்வு கூற முடியும்
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8289
ISSN: 2478-1061
Appears in Collections:2015 NOVEMEBR ISSUE 15 VOL III



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.