Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8208
Title: சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் சுட்டும் இசைச்செய்திகள்
Authors: Suriyakumar, S.
Keywords: ஏழிசை;பாலைகள்;பண்கள்;தாளங்கள்;யாழ்
Issue Date: 2019
Publisher: தமிழ் இலக்கிய கலை மன்றம்
Abstract: “சேரன் தம்பி சிலம்பிசைத்தான்” என்பதற்கிணங்க சேர மன்னனாகிய செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பிய நூலாகும். இந்நூல் சோழநாட்டில் தோன்றி பாண்டியநாட்டிற்கு சென்று அல்லல்பட்டு சேரநாட்டில் தெய்வநிலை அடையும் கண்ணகி என்ற அறியாச்சிறுமி மதுரையை எரித்து தெய்வநிலை பெறும் கதையைக் கூறுவதாகும். இது தமிழிலக்கியத்தில் மாத்திரமின்றி உலக இலக்கிய வரலாற்றிலேயே மிக அரிதானதொரு உதாரணமாக விளங்குகின்றமை குறிப்பிடதக்கது. இந்நூலில் மூவேந்தர்களுடைய ஒற்றுமை நாடும் விருப்பம் காணப்பட்ட போதும் சேரமன்னன் செங்குட்டவன் சிறப்பானவனாக புகழப்படுவதை காணலாம். இயல், இசை மற்றும் நாடகம் ஆகிய முத்தமிழ்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சிலப்பதிகாரத்திற்கு பல உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ள போதிலும் அவற்றுள்; அடியார்க்கு நல்லார் உரை மிகவும் சிறப்பு வாய்ந்ததென்பது பொதுவான கருத்தாகும். அந்தவகையில் சிலப்பததிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் ஏழுதிய உரையின் அடிப்படையில் பார்க்கின்ற போது இன்று தென்னிந்தியா மாத்திரமன்றி உலகம் முழுமைக்கும் வழக்கிலுள்ள கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இசைச் சொற்களுக்கும், இசை பயன்பாட்டு முறைக்கும் அடிப்படையாக அமைந்தது இதுவே எனலாம். அந்த வகையில் இதில் கூறப்பட்ட இசைச் செய்திகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு வரலாற்று மற்றும் விவரண ஆய்வு முறையில் இது அமைந்துள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8208
Appears in Collections:Department of Music



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.