Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4995
Title: மாதவிடாய் நிறுத்தப்பருவத்திலுள்ள பெண்களின் அளவும் அவர்களுடைய மனஅழுத்தம்இ பதகளிப்பு மனச்சோர்வுசார் அறிகுறிகளும்
Authors: Menaka, S.
Romiya, P.
Keywords: மாதவிடாய் நிறுத்தம்;மனஅழுத்தம்;பதகளிப்பு;மனச்சோர்வு
Issue Date: 2021
Publisher: ICCM 2021
Abstract: மாதவிடாய் நிறுத்தப் பருவத்திலுள்ள பெண்களினுடைய அளவு மற்றும் மனஅழுத்தம் பதகளிப்பு மனச்சோர்வுசார் அறிகுறிகள் எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் ஆய்வானது மாதவிடாய் நிறுத்தப்பருவத்திலுள்ள பெண்களின் அளவு மற்றும் அவர்களுடைய மனஅழுத்தம்இ பதகளிப்புஇ மனச்சோர்வு போன்ற உளம்சார் நெருக்கீட்டு அறிகுறியை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படடுள்ளது. அளவுசார் மற்றும் விபரண ஆய்வு அடிப்படையில் குறுக்குவெட்டுமுக ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ் ஆய்வானது நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 14 பிரதேசங்களில் வசிக்கின்ற 45 - 55 வயதிற்கிடைப்பட்ட 122 பெண்களை ஆய்வுமாதிரிகளாகக் கொண்டுள்ளதுடன் ளவசயவகைநைன சயனெழஅ ளயஅpடiபெ முலம் ஆய்வு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஆய்விற்குட்படுத்தப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விபரங்களை பெறும் பொருட்டு சுயமாகத் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்து மற்றும் ஆநnழியரளந சுயவiபெ ளுஉயடநஇ னுநிசநளளழைn யுnஒநைவல ளுவசநளள ளுஉயடந (னுயுளுளு- 21) போன்ற ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு விபரண மற்றும் அனுமானப் பகுப்பாய்வின்படி ஆய்விற்குட்படுத்தப்பட்ட 122 மாதிரிகளில் 61மூ ஆனோர் மாதவிடாய் நிறுத்தப் பருவத்திலுள்ளவர்களாக அறியப்பட்டுள்ளனர். அத்துடன் மனஅழுத்த அறிகுறியை 87.9மூ ஆனோரும் பதகளிப்பு அறிகுறியை 85.1மூ ஆனோரும் மனச்சோர்வு அறிகுறியை 79.7மூ ஆனோரும் கொண்டுள்ளனர். எனவே ஆய்விற்குட்படுத்தப்பட்ட பிரதேசத்தில் மாதவிடாய் நிறுத்தப் பருவத்தில் அதிகளவான பெண்கள் காணப்படுவதுடன் அவர்கள் மனஅழுத்தம் பதகளிப்புஇ மனச்சோர்வு போன்ற உளம்சார் நெருக்கீட்டு அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்பதை எடுத்து நோக்கலாம்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4995
Appears in Collections:Philosophy



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.