Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4739
Title: சுஜாதாவின் நாவலில் சொல்நிலை உத்திகள் - நடையியல் அணுகுமுறை
Authors: Sujiththa, S.
Ramesh, S.
Keywords: சொல்நிலை உத்திகள்;நடையியல்;புதுமையாக்கம்;ஒலிபெயர்ப்பு;அறிவியல்
Issue Date: 2015
Publisher: University of Jaffna
Abstract: இலக்கியங்கள் காலத்திற்கேற்ப புதிய வடிவங்களில் தோன்றி மக்களை சீh ;செய்யும் முக ;கிய படைப ;புக்களாகும். அறிவியல் வளாச்சி, அதனால் அமைந்த இயந்திரங்களின் முன்னேற்றம், அவற்றால் வாழ ;க்கையில் ஏற்பட்ட வேகம், இம் மூன்றும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலக்கியங்களில் ஒரு மாறுதலை விளைவித்தன. இலக்கியங்கள் வாயிலாக எளிதிலே கருத்துக்களை எடுத்துக்கொள்ளும ; வகையில் சமுதாயம் அமைவதற்கு மொழிநடை வடிவம் காரணமாகிறது. 'நடை' என்பது ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்தவல்லது. அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவருக்கே உரியதாக இருக்கும் மொழிப்பாங்கின் வெளிப்பாடே நடை ஆகும். 'சுஜாதாவின் நாவலில் சொல்நிலை உத்திகள ;-நடையியல் அணுகுமுறை' எனும் தலைப்பிலான இவ்வாய்வு 20ஆம் நூற்றாண்டில ; புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய சுஜாதா அவர்களது 'என் இனிய இயந்திரா' எனும் அறிவியல் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மொழியியல் மற்றும் நடையியல் அணுகுமுறைகளை ஒன்றிணைத்த விபரணமுறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவலில் அறிவியலை வெளிக்கொணரவேண்டும் என்பதற்காக எதையும் வலிந்து திணித்ததாகத் தெரியவில்லை. இவரது சொல்லாட்சிகளே அறிவியல் தன்மையை புலப்படுத்தி நிற்கின்றன. இங்கு பிறமொழிச்சொற்களின் கையாளுகை அதிகம். அதிலும் குறிப்பாக ஆங்கிலமொழிச் சொற்களையே தமிழ்மொழியில் அதிகம் ஒலிபெயர்த ;துப் பயன்படுத்தியுள்ளார். நாவலை கையாளும் உத ;தி மூலம் ஆசிரியரின் மொழித்திறனும், எழுத்தாற்றலும் வெளிப்படுவதோடல்லாமல் கலைப்படைப்பும் சிறப்படைகிறது. சுஜாதா நாவலில் மிகவும் உயர் தொழில்நுட்பம் மற்றும் கணணியின் உயர்மட்டப ; பயன்பாடு ஆகியவற்றை தனது மொழிநடையால் தெளிவாக விபரித்துள்ளார். இத்தன்மையதாக ஆசிரியரின் மொழி ஊடாக மரபும், புதுமையும், புதுமையாக்கமும், எளிமையாக்கமும் விரவிய நடை புலப்படுத்தபடுகின்றது. தமிழ் மொழியை அறிவியல் தளத்தில் பயணிக்க வைத்த இவரது மொழிநடையின் சிறப ;பம்சங்களையும், நடையியல் உத்திகளையும் ஒலி, சொல், தொடர், வாக்கியம் எனும் மொழியியல் ரீதியான அலகுகள் வாயிலாக சிறப்பாக வெளிக்கொணர முடியும் எனினும், இவ் ஆய்வானது அறிவியல் சார் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத ;துவதற்கு கையாண்டுள்ள சொல்நிலை உத்திகளை ஆராய்வதையே நோக்கமாகக் கொண்டமைந்துள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4739
Appears in Collections:Linguistics and English

Files in This Item:
File Description SizeFormat 
RR abstract ICCM 2015.pdf221.83 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.