Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4541
Title: திருக்குறளில் நல்லிணக்கச் சிந்தனைகள்
Authors: Pathmanaban, S.
Keywords: திருக்குறள்;அறம்;தர்மம்;நல்லிணக்கம்;உலகமயமாதல்
Issue Date: 2020
Abstract: தமிழில் நீதிநூல் இலக்கியவரிசையில் திருக்குறள் முக்கியத்துவம் பெறுகிறது. முப்பால் என திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இந்நூல் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகினற் து. சமுதாயத்தின் புதிய சவால்களாக மாறும் நல்லிணக்கச் சிந்தனைகள் பலவற்றை முன்னுதாரணமாகக் கூறும் தனித்துவச் சிறப்பு திருக்குறளில் தனித்த முத்திரையாக அமைகின்றது. பொதுவாக திருக்குறளின் அறத்துபப் hல் அறம், தர்மம் எனும் பெயர் விளக்கத்திற்குரியதாக காணப்பட்டாலும் மாறிவரும் உலகமயமாதலில் நல்லிணக்கச் சிந்தனைகள் வளர்ச்சியும் வளமும் பெறவேண்டியது அவசியமான தொன்றாகும். சமயம், சமூக வாழ்வியல், பண்பாட்டு கலப்பு போனற் வைகளின் வளர்ச்சிக்கான பாதையில் சமூகத்தினரிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. சமயம், பண்பாடு நாடு, மொழி, இனம் எனப் பரந்துபட்ட விடயங்களில் நல்லிணக்கம் ஏற்படத்தக்க பரந்த மனப்பாங்கினை உருவாகக் த்தக்க விடயங்கள் அறத்துப்பாலின் இல்லறவியலில் எட்டாம் அதிகாரம் முதல் இருபத்தி நான்காம் அதிகாரம் வரை முன்வைக்கப்படுகின்றன. இதற்குமேலாக உயர்ந்த தன்மையாகவும் நல்லொழுக்கமாகவும் கொள்ளத்தக்க விடயங்கள் துறவறவியலில் இருபத்தைந்தாம் அதிகாரம் முதல் முப்பத்து மூன்றாம் அதிகாரம் வரைபேசப்படுகின்றன. இவ் விடயங்களின் மீள்வலியுறுத்தல் நல்லிணக்க சிந்தனைகளை வளம்படுத்துவதாக அமையும் தன்மைகள் இலக்கியவிவரண ஆய்வு, பகுப்பாய்வுஎனும் ஆய்வுமுறையியலினூடாக திருக்குறளின் பரந்த உரைவளத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாய்வினூடாக முரண்பாடறற தன்மையில் பரந்தமனப்பாங்கு உருவாகும் தன்மையில் பல்வேறுவிதமான நடத்தை சார்ந்த நல்லிணகக்ங்கள் உயர்ந்த சிந்தனைகள் திருக்குறளில் எவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளன என்னும் தன்மைகள் வெளிக்கொணரப்படும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4541
ISBN: 978-93-87946-29-3
Appears in Collections:Sanskrit



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.