Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4089
Title: | மொழியாற்றல்விருத்திகனிஷ்ட இடைநிலை மாணவர்களின் வினைத்திறனான கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம |
Authors: | Mariyadas, S. |
Keywords: | கனிஷ்ட இடைநிலை மாணவர்கள்;வினைத்திறனான கற்றல்;மொழியாற்றல்விருத்தி |
Issue Date: | 2018 |
Publisher: | University of Jaffna |
Abstract: | மாணவர்களின் கற்றல்சார் வினைத்திறன் மிக்கதான செயற்பாடுகள் சிறப்பாக அமைவதற்கு அவர்களிடம் காணப்படும் மொழியாற்றல் விருத்தி பெரும் பங்காற்றுகின்றது. ஆனால் இம்மொழியாற்றல் விருத்தியானது அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரியாக வளர்ச்சியடைவதில்லை அந்தவகையில் ஆரம்பப்பரிவில் இருந்து நேரடியாக உள்வாங்கப்படும் கனிஷ்ட இடைநிலை பிரிவு மாணவர்கள் இடைநிலைக் கற்றலின் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப் பட்டுள்ளது. இதனால் மொழியாற்றல் கற்றலில் தாக்கம் செலுத்துகின்றது என்பது புலனாகிறது. மாணவர்கள் தெளிவாக வாசிக்காமை, பேசுவதில் சிரமப்படுதல், கிரகித்தலில் இடர்படுதல், எழுத்துத்திறன்குறைவு, போன்றவற்றை வெளிக்காட்டினார்கள். அத்துடன் ஆசிரியர்கள் இவ்வாறான மாணவர்களினை ஏனைய மாணவர்களோடு இணைத்துக் கற்பிக்கும்போது அது கற்பித்தல் செயற்பாட்டில் சிரமங்களை ஏற்படுத்துகின்றது. அத்தோடு வீடுகளிலும் மாணவர்களின் மொழித்திறனில் பெற்றோர்களின் பங்களிப்பும் குறைவாக உள்ளது.மாணவர்கள் வாசித்தல், எழுதுதல், பேசுதல், கிரகித்தல் போன்றவற்றில் இடர்படுகின்றார்களா என்பதனை இனங்காணுதல்,ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகள், மாணவர்களின் மொழியாற்றல்களில் பங்களிப்புச் செய்கின்றதா என்பதை மதிப்பீடு செய்தல், மொழியாற்றல் விருத்தியின்மை மாணவர்களின் அடைவுகளில் தாக்கம் செலுத்துகின்றமையை உறுதிப்படுத்தல், மாணவர்களின் மொழியாற்றல் வளர்ச்சிக்கான விழிப்புணர்வுகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தல்.என்பவற்றினை நோக்கங்களாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாய்விற்கு04 மாதிரிப் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இலகு எழுமாற்று மாதிரிமூலம் 5 : 1 எனும் விகிதத்தில் தெரிவு செய்யப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. இலகு எழுமாற்று மாதிரிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டு, தரவுப் பகுப்பாய்வு முறைகளாக அளவறிசார் முறையும், பண்பறிசார் முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வினாக்கொத்து முறை, மற்றும் அவதானமுறைகள், உரையாடல்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி பகுப்பாய்வு செய்யப்பட்டதன் பின்னர்கண்டுபிடிப்புக்களாக வாசிப்பு, எழுத்துத்திறன், உச்சரிப்பு என்பன வினைத்திறனான கற்றலைப்பாதிக்கின்றமை கண்டறியப்பட்டுத. இதன் தீர்வுகளாக மாணவர்களிடத்தே மொழித்திறன் குறைபாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதற்கான விதப்புரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மொழியாற்றலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்தல், மேலதீக வகுப்புக்கள் நடாத்துதல், கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பரீகாரகற்பித்தலை மேற்கொள்ளுதல்,விஷேட கற்பித்தல் முறைகளைப்பின்பற்றல்,கிரகித்தல் திறன் தொடர்பான ஆற்றல்களை வளர்த்தல், உளவியல் ரீதியான ஆலோசனை வளங்கல்,பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல், போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மாணவரின் கற்றலை வினைத்திறனானதாக மாற்றலாம். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4089 |
ISBN: | 978-955-0585-11-3 |
Appears in Collections: | JUICE 2018 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
03 Pages from Humanities, Social Sciences _ Law-3.pdf | 1.07 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.