Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2582
Title: திருமந்திரம் புலப்படுத்தும் சமூக நல்லிணக்க, நல்லொழுக்க சிந்தனைகளும் சமகால சமுதாய போக்குகளும் - ஒர் ஒப்பீட்டாய்வு
Authors: Poologanathan, P.
Keywords: நல்லொழுக்கம்;நல்லிணக்கம்;அறம்;நிலையாமை;தந்திங்கள்
Issue Date: 2016
Publisher: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Abstract: இவ்வாய்வுக் கட்டுரையானது திருமூலரால் அருளப்பட்ட மூவாயிரம் பாடல்களைக் கொண்ட பெரும் தொகுதியான திருமந்திரம் வலியுறுத்தும் சமூக நல்லிணக்க, நல்லொழுக்க சிந்தனைகளை இன்றை சமுதாய போக்குகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதாக அமைகிறது. இன்றைய 21ம் நூற்றாண்டானது பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம், அரசியல் போன்ற துறைகளிலே முன்னேற்றம் கண்டிருப்பினும் சமூகங்களிடையே நல்லிணக்கத்தினையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னேற்றம் காணவில்லையென்றே குறிப்பிட முடியும். மாறாக சமூகங்களிடையே பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் பகைமைகளும் வன்முறைகளுமே அதிகரித்துச் செல்கின்றன. இதன் விளைவாக உலக நாடுகளுக்கிடையே கொடிய யுத்தம், செயற்கை அழிவுகள், பசி, பஞ்சம், பட்டினி போன்றன நிகழ்கின்றன. சமூகங்களிடையே நல்லிணக்க, நல்லொழுக்கங்களை நிலைநாட்டுவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல அமைப்புக்கள் தோன்றியிருப்பினும் சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லை என்பதனை இன்றைய உலகளாவிய போக்குகள் எமக்கு வெளிப்படுத்துகின்றன. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் எனும் சித்தர் 3000 ஆண்டுகள் தியானத்தினூடாக அனுபவித்த விடயங்களை ஒன்று திரட்டி 3000 மந்திரங்களைக் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தார். திருமுறைகளில் 10ம் திருமுறையாகவும் மூலமந்திரமாகவும் தமிழ் மூவாயிரமாகவும் போற்றப்படும் இது ஒன்பது தந்திரங்களாகப் பிரிக்கப்பட்டு வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு தேவையான இன்றைய ஒழுக்க நெறிகளை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக சமூக, சமய ஒற்றுமை, கொல்லாமை, புலால் மறுத்தல், பிறர் மனை நயவாமை, செல்வம் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை, அறம் செய்வோர் திறம், அறம் செய்யார் திறம், அன்புடைமை, பொதுமகளீர்இழிவு, பற்றறுத்தலின் பெருமை, பொய்யுரைத்தலை தவிர்த்தல் போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. திருமந்திரப் பாடல்களினூடாக வெளிப்படுத்தப்படும் நல்லிணக்க நல்லொழுக்க சிந்தனைகளை இன்றைய சமுதாய போக்குகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்காக பல திருமந்திர உரை நூல்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டும் சம கால செல்நெறியுடன் ஒப்பிட்டும் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2582
ISSN: 2478-0634
Appears in Collections:Research Publication - Library

Files in This Item:
File Description SizeFormat 
International Hindu COnference 2016.pdf1.86 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.