Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13147
Title: யாழ்ப்பாண நவீன காண்பியக் கலை வெளிப்பாட்டில் மாற்குவின் தேடலும் பரிசோதனை முயற்சிகளும் - கற்பித்தலியல் அடிப்படைகளும்
Authors: Pirashanth, P.
Keywords: நவீனத்துவம்;காண்பியல் கலை;பரிசோதனை;அணுகு முறைகள்;எதிர்வினை
Issue Date: 2026
Publisher: Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna
Abstract: இவ்வாய்வு யாழ்ப்பாண நவீன காண்பியக் கலை வெளிப்பாடானது புதிய தேடல்கள், பரிசோதனைகள் மூலமாக எவ்வாறான மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதனை நவீன ஓவியத்தின் தந்தை என அழைக்கப்படும் ஓவியர் மாற்குவின் படைப்புக்களின் அடிப்படையில் ஆராய்வதாக அமைகின்றது. மாற்குவின் காண்பிய வெளிப்பாடுகளின் அணுகுமுறைகள் காண்பியக் கலைக்கான கற்பித்தலியலில் உள்வாங்கப்படுகின்றதா? என்பது ஆய்வுப்பிரச்சினையாக உள்ளது. 1980 களில் இலங்கை அரசியல் நிலவரங்கள், சமூக பண்பாட்டு மாற்றங்கள் போன்றவை மாற்கு அவர்களதும், அவரோடு இயங்கிவந்த இளம் கலைஞர்களின் வெளிப்பாடுகளி;ல் கருப்பொருள் ரீதியான புலமை சார்ந்த புதுமையினைக் கண்டறிவதற்கான பரிசீலினை முயற்சிகளாக அமைந்தன. பாரம்பரிய முறைகளை மீறிய நவீனகலை, இலக்கியம், சிந்தனைகளில் புதிய பரிமாணங்களையும் தீவிர மாற்றங்களையும் முன்னெடுக்கும் முற்போக்குப் புத்தாக்க வாத ‘நவ வேட்கை வாதம’; (Avant - Gaedism/ Modenist Radicalism) சார்ந்த மாற்குவின் ஓவியப் படைப்புக்களில் திரிபு, சிதைவு, விகாரம், இயல்பினை மீறிய கனபரிமாணத் தன்மை போன்ற நவீன அழகியல் நியமங்களையும், சிற்ப வெளிப்பாட்டுகளில் திணிவு, வெளி போன்றவற்றுடன் உருவமைப்பு, உள்ளடக்கம், உத்தி நுட்பங்களின் பல்வகைப் பாணிகளின் முயற்சியினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. வரையறைகளை மீறிய ஒரு கலைஞனது ஊடகம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் புதிய பரிணாம வளர்ச்சியை கண்டடைந்த மாற்குவின் படைப்புகள் சராம்சம், குணவியல்பு பண்புகள் மாறாது கருத்தமைவுக் கேற்ப யதார்த்த வாத மரபினை கேள்விக்குட்படுத்தும், சவால் விடும் பாங்கினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. செவிப்புலத்திற்குரிய இராகங்களை கட்புலத்திற்குரிய ஓவிய வெளிப்பாட்டின் கனபரிமாணக் கோடுகள் மூலம் புலன் மாற்றீடு செய்யும் பண்பினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. மேலைத்தேய, கீழைத்தேய நவீன மூலங்களை ஏற்று புதிய பரிசோதனை முயற்சிகளினூ டாக அவரது படைப்புக்களின் தனித்துவமானது சமூக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டமைக்கான சான்றாதாரங்களை கலை விமர்சகர்கள், கலையாசிரியர்களின் கருத்துக்களின் அடிப் படையில் விபரிப்பதாகவும்,யாழ்ப்பாணத்து சமகால காண்பிய கலைமீது ஏற்படுத்திய தாக்கம் எவ்வாறானதென பல கோணங்களில் கண்டறிவதாகவும் அமைகின்றது. மேலும் பண்பியல் ஆய்வு, ஒப்பியல் ஆய்வு அணுகுமுறைகள் மூலமாக மாற்குவின் படைப்புக்கள் வெளிப்படுத்தும் பண்பினை ஆய்வு செய்வதாக அமைகின்றது. மாற்குவின் நவீன ஓவிய, சிற்ப வெளிப்பாட்டினை எவ்வாறு வாசிப்பது, அவற்றில் கைக்கொள்ளப்பட்ட உத்திநுட்பங்கள், பரிசோதனைகள் (Experiment) போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம் நவீன, சமகால காண்பியக் கலைப் படைப்பாளிகள், காண்பியக் கலையினை பயின்றுவரும் மாணவர்களுக்கான கற்கை நெறிக் கற்பித்தலியல் அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கிய தன்மையினையும் காணமுடிகின்றது. தரவு சேகரிப்பு முறைகளாக நூல்கள், இணையதளம், ஒளிப்படங்கள், நேர்காணல் பதிவுகள் போன்றவை அமைகின்றன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13147
Appears in Collections:IRCVPA 2026

Files in This Item:
File Description SizeFormat 
யாழ்ப்பாண நவீன காண்பியக் கலை.pdf139.44 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.