Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13141| Title: | பின்காலனித்துவ இலங்கையில் கலைக் கல்விக் கொள்கை மாற்றமும் அறிவு அதிகாரத்தின் தொடர்ச்சியும்: ஆரோக்கியமான கற்பித்தலியல் நடைமுறைகளை நோக்கிய ஒரு விமர்சன ஆய்வு |
| Authors: | Dilakshan, T. |
| Keywords: | அறிவு அதிகாரம்;ஆரோக்கியமான நடைமுறைகள்;கலைக் கற்பித்தலியல்;கல்விக் கொள்கை;பின்காலனித்துவம் |
| Issue Date: | 2026 |
| Publisher: | Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna |
| Abstract: | இலங்கையின் பின்காலனித்துவ அரசியல் வரலாற்றில் கல்விக் கொள்கைகள் அரச அதிகாரக் கட்டமைப்புகளையும் மேலாதிக்க சிந்தனை முறைகளையும் தீர்மானிக்கும் கருவிகளாகவே தொழிற்பட்டு வந்துள்ளன. 1948 இல் சுதந்திரம் பெற்றபோதிலும், கல்விக் கட்டமைப்புகளில் காலனித்துவ அறிவுசார் அமைப்புகள், மேற்கத்திய பாடத்திட்டங்கள் மற்றும் அறிவு உற்பத்தியின் அதிகார மேலாதிக்கம் முழுமையாக மாற்றமடையாது ஆழமாக வேரூன்றியுள்ளன. இலங்கையில் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஐரோப்பிய மையவாதக் கோட்பாடுகள், பின்காலனித்துவ அறிவு அதிகார உறவுகள் மற்றும் பண்பாட்டு வெளிப்பாடுகளின் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் தொடர்கின்றன. 1939 கல்விக் கட்டளைச் சட்டம,; 1943; கல்விக்கான விசேட குழு அறிக்கை, 1947 இலவசக் கல்வி அறிமுகம், 1956 கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிக் கொள்கை, 1958 கொண்டுவரப்பட்ட தமிழ் மொழிக்கான சிறப்பு ஏற்பாடுகள், 1961 மத நிறுவனங்களின் கீழ் இருந்த பாடசாலைகளை அரசுடமையாக்கம், 1972; உயர்கல்வியில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறை, 1978 பல்கலைக்கழகச் சட்டம், 1981 கல்வி வெள்ளை அறிக்கை, 1985 தேசிய கல்வி நிறுவனம் உருவாக்கம், 1991 தேசிய கல்வி ஆணைக்குழு நிறுவல், 1997 கல்வி சீர்திருத்தங்கள், மற்றும் அண்மைய 2020, 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி கொள்கை வரைபுகள் (NEPF 2023/OBE-SCL) என்பன கல்வி, நிர்வாக மற்றும் உயர்கல்வி கட்டமைப்புக்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் கலைக் கல்வியில் உள்;ர்ஃமரபுசார் அறிவு, பாரம்பரிய கலை வடிவங்கள், மொழி மற்றும் பண்பாட்டு பன்மைத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் காலனித்துவ நீக்கம் செய்யப்பட்ட கலை கற்பித்தலியல் நடைமுறைகளை முழுமையாக உள்வாங்கத் தவறி ஐரோப்பிய மையவாதக் கலைக்கோட்பாடுகளின் ஆதிக்கத்தையே தக்கவைத்துள்ளன என்பதே பிரதான ஆய்வுப் பிரச்சனையாகும். எனவே, 1948-2025 வரையிலான இலங்கையின் கலைக் கல்விக் கொள்கை மாற்றங்களை விமர்சன ரீதியாக ஆராய்வதுடன், அவற்றில் காலனித்துவ அறிவு அதிகாரத்தின் தொடர்ச்சி எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும், அது மாணவர் மைய கலைக் கற்பித்தலியலுக்கு ஏற்படுத்தும் தடைகளையும் பகுப்பாய்வு செய்வதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு பண்புசார் ஆய்வு முறையை முதன்மையாகக் கொண்டு வரலாற்று-விளக்க ஆய்வு வடிவமைப்புடன் விமர்சன ஆய்வு அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இரண்டாம் நிலைத் தரவு மூலங்கள் வரலாற்று மற்றும் நோக்கப்பூர்வ மாதிரி தெரிவுமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விமர்சன உரையாடல் பகுப்பாய்வு மற்றும் கருப்பொருள் பகுப்பாய்வு மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இதற்காக எட்வர்ட் சைட் அவர்களின் கீழைத்தேசவாதம், மிஹேல் பூக்கோவின் அதிகார-அறிவுக் கோட்பாடு, அலாதாஸ் அவர்களின் கல்விசார் தங்கிவாழ்தல் நிலை மற்றும் நிகுகி வா தியோங்கோவின் அறிவைக் காலனித்துவ நீக்கம் செய்தல் ஆகிய கோட்பாட்டு மாதிரிகள் பயன்படுகின்றன. ஆய்வின் கண்டறிதலின்படி, அறிவை வரையறுக்கும் அதிகாரம், பாடத்திட்டத் தேர்வு, கலை அறிவின் அங்கீகாரம் மற்றும் உள்;ர் கலை பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் காலனித்துவ அதிகாரத்தின் தொடர்ச்சிகள் காணப்படுகின்றன. இதனால் உள்;ர் கலை மரபுகள் மட்டுப்படுத்தப்பட்டு மாணவர்களின் படைப்பாற்றல், சுயவெளிப்பாடு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி பாதிக்கப்படுகின்றன. எனவே, உள்;ர் கலை அறிவு மரபுகள், பண்பாட்டு பன்மைத்துவம் மற்றும் மாணவர் மையக் கற்றலை உள்ளடக்கிய பண்பாட்டுப் பொறுப்புடைமையான கலைக் கற்பித்தலியலை நிலைநிறுத்தி அறிவு ஜனநாயகத்தை நோக்கி இலங்கையின் கலைக் கல்வி நகர்வதே அவசியமென இவ்வாய்வு முடிவு செய்கிறது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13141 |
| Appears in Collections: | IRCVPA 2026 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| பின்காலனித்துவ இலங்கையில் கலைக் கல்விக் கொள்கை மாற்றமும் அறிவு அதிகாரத்தின் தொடர்ச்சியும்.pdf | 194.83 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.