Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13139
Title: சமூக அடிப்படையிலான கலை வகுப்பறை ஓர் ஆவணவியல் ஆய்வு
Authors: Anuja, C.
Keywords: சமூக அடிப்படையிலான வகுப்பறை;சமூக அடிப்படையிலான கற்றல்;கலைக் கல்வி;சமூகக் கலை;அனுபவம்சார் கற்றல்;பாடசாலை–சமூக கூட்டாண்மை
Issue Date: 2026
Publisher: Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna
Abstract: 21ஆம் நூற்றாண்டின் கல்விச் சூழலில் கற்றல், கற்பித்தல் முறைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. பாரம்பரிய வகுப்பறை மையப்படுத்தப்பட்ட கல்விமுறையிலிருந்து, மாணவர்களின் வாழ்வியல் அனுபவங்கள், சமூகச் சூழல், பண்பாட்டு பின்னணி ஆகியவற்றை மையமாகக் கொண்ட கற்றல் அணுகுமுறைகளை நோக்கி கல்வி நகர்ந்து வருகிறது. இம்மாற்றத்தின் முக்கிய வெளிப்பாடாக சமூக அடிப்படையிலான வகுப்பறை (ஊழஅஅரnவைல-டியளநன ஊடயளளசழழஅ) அணுகுமுறை கருதப்படுகிறது. இவ்வணுகுமுறையானது, பாடசாலைக்கும் சமூகத்திற்குமிடையிலான உறவை வலுப்படுத்துவதனூடாக வகுப்பறையில் கற்றறிந்த அறிவை, சமூகச் சூழலில் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் கற்றலானது கோட்பாட்டு அறிவாக மட்டுமன்றி அனுபவம்சார், செயன்முறைசார், வாழ்வியல் சார்ந்த செயல்முறையாக மாற்றமடைகிறது. இவ்வாய்வின் நோக்கங்களாக சமூக அடிப்படையிலான கலை வகுப்பறையின் கருத்தை விளக்குதல் அதன் பல்வேறு மாதிரிகளை அடையாளம் காணுதல் அவை மாணவர்களின் கற்றல், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பங்கேற்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தல் மேலும், சமூக அடிப்படையிலான கலைக் கல்வியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் என்பனவாகும். பாடசாலைக் கல்வியில் சமூக வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை, கலைக் கல்வி பெரும்பாலும் வகுப்பறைக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது, உள்ளூர்க் கலைஞர்களினதும் சமூக அமைப்புகளினதும் பங்களிப்பு குறைவாக இருத்தல், மாணவர்களுக்கு அனுபவம்சார் கலைக் கற்றல் வாய்ப்புகள் போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை ஆகியவை இவ்வாய்வின் ஆய்வுப்பிரச்சினைகளாகும். இவ்வாய்வில் பண்புசார் அணுகுமுறையும் ஆவணவியல் ஆய்வு முறையும் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகள் ஆய்வின் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. சமூக அடிப்படையிலான கலை வகுப்பறைகள் மாணவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் ஒத்துழைப்புத் திறனை மேம்படுத்துகின்றன என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இவ்வணுகுமுறை உள்ளூர் கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்கவும், அனுபவம்சார் கற்றலை ஊக்குவிக்கவும், மாணவர்களின் கற்றலிலான ஆர்வத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. அத்துடன், ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளூர் கலைஞர்கள், சமூக அமைப்புகள் போன்றனவற்றின் செயற்பாட்டுப் பங்கேற்பையும் வலுப்படுத்துகிறது. எனவே, பாடசாலைக் கல்வியில் சமூக வளங்களை ஒருங்கிணைத்து சமூக அடிப்படையிலான கலை வகுப்பறைகளை விரிவுபடுத்துதல், ஆசிரியர்களுக்கு உரிய தொழில்முறை பயிற்சிகளை வழங்குதல், சமூக - பாடசாலை கூட்டாண்மையை வலுப்படுத்துதல், அனுபவம்சார் கலைக் கல்வியை ஊக்குவிக்கும் கல்விக் கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவை இவ்வாய்வின் முக்கிய பரிந்துரைகளாக முன்வைக்கப்படுகின்றன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13139
Appears in Collections:IRCVPA 2026



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.