Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13069| Title: | ஆர்ப்பாட்டக்களங்களில் தமிழ் மொழிநடைப் பிரயோகங்கள் - பதாகை வாசகங்களை மையப்படுத்திய சமுதாயமொழியியல் ஆய்வு |
| Authors: | Shiromi, M. |
| Keywords: | மொழிநடை;சமுதாயமொழியியல் மனப்பாங்கு;ஆர்ப்பாட்ட மொழி வழக்கு;பயனாக்க அடையாளக்கோட்பாடு |
| Issue Date: | 2025 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | மொழி என்பது கருத்துப்பரிமாற்றக் கருவியாக கற்றல் - கற்பித்தல் என்கின்ற தளத்தி லிருந்து சமூகப்பயன்பாட்டுத் தளத்திற்கு செல்கின்ற பொழுது அதன் யதார்த்தமான பிர யோகங்களானவை சமூகச்சூழ்நிலைகளின் அடிப்படையில் மாறுபடுகின்றன. அந்த வகை யில் இலங்கை மக்களால் 2022 பங்குனிமாதக்காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடிகளுக் கெதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டக்களங்களில் தாம் பேசும் மொழியின் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கென கையிலேந்தியவாறு காட்சிப்படுத்திய பதாகைகளில் தமிழ் மொழியில் கட்டமைக்கப்பட்ட பல்வேறு மொழிநடைப் பிரயோகங்களானவை இலங்கைச் சமூகத்தினரது சமுதாயச் சிக்கல்களையும், மக்களது வாழ்வியலுக்கான சவால்களையும் நன்கே வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, இவ்வாய்வானது ஆர்ப்பாட்டக்களத்தில் காட்சிப் படுத்தப்பட்ட பதாகைகளில் தமிழ் மொழிநடைப் பிரயோகங்களை சமூதாய-மொழியியல் கண்ணோட்டத்துடன் அணுகி தற்கால தமிழ் சமூகத்தின் தமிழ் மொழிநடைக்கட்டமைப்பு விதங்களை வகைப்படுத்தி அடையாளப்படுத்துதல் என்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பதாகைகளின் மொழிநடைகள் ஊடாக வெளிப்படும் சமுதாய மொழியியல் மனப்பாங்குகளை மொழியியலின் பயனாக்க அடையாளக் கோட்பாட்டின் படி ஆராய்ந்து வெளிப்படுத்துதல் என்பதை துணை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட் டுள்ளது. அந்தவகையில் நோக்கத்தின் அடிப்படையிலான தரவு சேகரிப்பு முறையின் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்களத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 50 பதாகைகளின் புகைப் படப்பிரதிகள் இணையத்தள பக்கங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகங்களின் ஊடாக மொழித்தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே வெளிவந்த இவ்வாய்வுடன் தொடர்புபட்ட ஆய்வுக்கட்டுரைகள், தமிழ் இலக்கண நூல்கள், சமுதாய - மொழியியல் நூல் கள், இணையத்தள செய்திகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்விற்கான பின்னணித்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 12 வகையான சமுதாய - மொழியியல் தொடர்பினை வெளிப்படுத்தும் மொழிநடைக்கட்டமைப்புகள் தமிழ் எழுத் திலக்கண விதிமுறைகளின்படி ஆராயப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருப்பதுடன் பயனாக்க அடையாளக்கோட்பாட்டின்படி ஆர்ப்பாட்டத்தின் மையதொனிப்பொருளுடன் தொடர்புபட்ட மேலதிக 3 வகையான தொனிப்பொருள்கள் கண்டறியப்பட்டு உள்ளடக்கப் பகுப்பாய்விற் குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் சமூகம் சார்ந்த நெகிழ்ச்சிப்போக்கினை அனுசரித்த, தமிழ் மொழியின் எழுத்திலக்கண கட்டமைப்புகளைப் பதிவு செய்து அவை வெளிப்படுத்தும் சமூக மனப்பாங்கினை ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தமிழ்மொழி பேசும் சமூகத்தினது சமுதாயமொழியியற்பாற்பட்ட கூட்டிணைவினைவுகளையும் சூழ்நிலைக்கேற்ற வேறுபட்ட வெளிப்பாடுகளையும் நிறுவி ஆவணப்படுத்த முடிந்துள்ளது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13069 |
| Appears in Collections: | Cintanai 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| ஆர்ப்பாட்டக்களங்களில் தமிழ் மொழிநடைப் பிரயோகங்கள்.pdf | 2.25 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.