Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13027
Title: சிலப்பதிகாரத்தில் ஆடல் இலக்கணம்
Authors: Arulchelvi, K.
Keywords: சிலப்பதிகாரம்;தமிழ் ஆடல் இலக்கணம்;மாதவி அரங்கேற்று காதை
Issue Date: 2025
Publisher: University of Jaffna
Abstract: தமிழர்களுடைய வாழ்வியல் பயன்பாட்டில் பண்பாடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவ் வகையில் தமிழரின், கலை, கலாச்சாரம், மக்களின் வாழ்வியல் அகம், புறம் என்பனவற்றைப் படம் பிடித்துக் காட்டும் பாங்கில் எழுந்த சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் என்பன தமிழ் மக்களுக்குக் கிடைத்த அரும் பெரும் சொத்துக்கள் என்றால் அது மிகையாகாது. எத்திக்கும் புகழ் மணக்கும் தித்திக்கும் தீந்தமிழில் அமைந்த ஐம்பெரும் காப்பியங்களில் மக்களின் மரபைக் காத்து இயம்பும் முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம். பற்றெல்லாம் முற்றும் துறந்த ஏற்றமிழ்க் குரு சீலரான இளங்கோவடிகள் கி.பி. 2ம் நூற்றாண்டில் தமது முத்தமிழ்ப் புலமை விளக்க இக்காப்பியத்தை ஆய்துள்ளார். சிலப்பதிகாரம் சமுதாய நீதி காட்டும் காப்பியம் மட்டுமல்ல இயல்த்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் மூன்றின் செழுமையினை செம்மையாக பறை சார்த்தும் செந்தமிழ்க் காப்பியம். இது கலை வளத்தினையும், வாழ்வியல் வளத்தினையும், வளமாக்கிய அதாவது பண்பாக்கிய காப்பியம். கதை தழுவி பாட்டோடு சிலம்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்கப்பட்டதே சிலப்பதிகாரம். தமிழகத்தில் இடம் பெற்ற பழம் கதையை பாடிய புலவர் பெருமான் இளங்கோ, அதனை மூன்று காண்டங்களாகவும், முப்பது காதைகளாகவும் வகுத்து தமிழுக்கும், கலைக்கும், தனித்தன்மையுடைய சாட்சியமாக சிலம்பு மட்டுமே உள்ளது. என மெய்பித்துக் காட்டியுள்ளார். அதனால் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றறொரு மணி ஆரம்படைந்த தமிழ் நாடு' என்று பாடினான் பாரதி. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதை குறிப்பிடும் ஆடலாசான் இயல், இசை, நாட்டியம் என்கிற முத்துறைகளில் வல்லவராகவும், ஆடலுக்குரிய விதிமாண் கொள்கைகளை நன்கு அறிந்தவராகவும், மரபு வழிமாறாமல் கற்பிப்பவராகவும் ஆடவும், ஆட்டுவிக்கவும் வல்லவராகவும் விளங்கினார் என்பதை மாதவிக்கு ஆடல் கற்பித்தல் வாயிலாக அறிய முடிகின்றது. ஐந்தாண்டில் நாட்டியம் கற்பிக்க ஆரம்பித்து செயல்முறை வகைகள் கற்பித்தல், பொருள் நிலைகளைக் கற்பித்தல், அபிநய நிலைகளைக் கற்பித்தல், அபிநயத்தின் பொழுது ஒற்றைக் கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகள் அவைகள் பயன்படுத்தப்பட வேண்டிய முறைகள், கால் தொழிற்பாட்டிற்குரிய மண்டல முறைகள். ஆடல் ஆரம்ப உடற்பயிற்சி முதல் அரங்கினுள் புகுந்து ஆடும் இயல்பு வரை மட்டுமல்லாது, ஆடை அலங்காரங்கள், ஒப்பனை முறைகள், பாடல் இசைக்கும் முறைகள், வழிபாட்டு முறைகள் போன்ற பல்வேறு 'தமிழ் ஆடல்’ இலக்கணத் திறன்களும் சிலப்பதிகார அரங்கேற்றப் பகுதியில் சிறந்தும் பொலிந்தும் காணப்படுகின்றன. எனவே வடமொழியில் அமைந்த பரதநாட்டியத்தை தமிழ் சமூகம் ஆற்றுகைப்படுத்த வேண்டும் என்ற நிலையிலிருந்து தமிழ் ஆடற்கலை வடிவத்தை ஆற்றுகைப்படுத்த எம் கையில் உள்ளங்கை நெல்லிக்கனி போல சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டும் தமிழ் ஆடல் இலக்கணங்கள் காணப்படுகின்றது என்பது திடமான சான்றுகளுடன் நிரூபமாகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13027
Appears in Collections:Department of Dance



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.