Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12967
Title: சங்க இலக்கிய ஒப்பியல் ஆய்வில் ஈழத்துத் தமிழறிஞர்களின் பங்களிப்பு
Authors: Ajanthakumar, T.
Vathanareka, A.
Keywords: ஒப்பியல்;இலங்கைத் தமிழ் அறிஞர்கள்;சங்க இலக்கியம்
Issue Date: 2021
Publisher: University of Jaffna
Abstract: பண்டைய தமிழ் இலக்கியங்களின் வழி, வரலாற்று சமுதாயப் பண்பாட்டு மீட்புப் பணியிலும், மேலைத்தேய கீழைத்தேய நாட்டு இலக்கியங்களுடன் ஒப்பாய்வு செய்த திலும், அதன் தொன்மையையும் மேன்மையையும் நிலைநாட்டுவதற்கு ஈழத்துத் தமிழறிஞர்கள் முன்னோடியாக விளங்கினார்கள். சங்க இலக்கியப் படைப்புமுதல் அதன் செம்மையுறு பதிப்பு, உரையெழுதல், பாடபேத ஆராய்ச்சிகள், சமூக ஆராய்ச் சிகள், ஒப்பியல் ஆய்வுகள் என்று விரிந்துசொல்லும் ஈழத்தவர்களின் முயற்சிகளில் ஒப்பியல் ஆய்வின் மூலம் சங்க இலக்கிய ஆய்விற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பு முக்கியமானது ஆகும். மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை முதல் கலாநிதி மனோன் மணி சண்முகதாஸ் வரை அறிஞர் பலரின் பங்களிப்பு சங்க இலக்கிய ஒப்பியல் ஆய்வில் நிகழ்ந்துள்ளது. உரோமப்பேரரசுகால இலக்கியத்துடன் சங்ககால இலக்கி யங்களை ஒப்பிடுதல், பண்டைய கிரேக்க நூல்களுடன் சங்ககால இலக்கியங்கள் கூறும் வரலாற்றுத்தகவல்களை ஒப்பிடுதல் என்று பிரயோக வரலாற்றியல் ஆய்வை முன்னெடுத்த பெருமை, மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளைக்கு உரியதாகும். சுவாமி விபுலானந்தர் அவர்கள் கிரேக்க மொழி இலக்கியங்களிலே காணப்படும் சில பண்பு களை சங்க இலக்கியங்களோடு ஒப்பிட்டுள்ளார். தனிநாயகம் அடிகளார், தனது பட்டமேற்படிப்புகளுக்காகச் சங்க இலக்கியங்களை முதனிலைத்தரவுகளாகக் கொண்டு ஒப்பியல்கண் கொண்டு நோக்கிப் புதிய பார்வைகளை உருவாக்கும் முனைப்பைக் கொண்டிருந்தார்.பேராசிரியர் சு.வித்தியானந்தன் தனது தமிழர் சால்பில் (1954) கிரேக்க உரோம ஆசிரியர்களின் கருத்துக்களைப் பயன்படுத்தி ஒப்பிட்டுள்ளார். சங்க இலக்கியங்களுக்கு மார்க்சிய வெளிச்சம் பாய்ச்சியதோடு ஒப்பியல் ஆய்விலும் புதிய பாய்ச்சல்களைப் பேராசிரியர்களான கைலாசபதியும் சிவத்தம்பியும் ஏற்படுத்தினார்கள். பேராசிரி யர் அ.சண்முகதாஸ் அவர்களும் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் யப்பானிய மொழி. இலக்கியம், பண்பாடு என்பவற்றுடன் சங்ககாலத்தை ஒப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு சங்க இலக்கிய ஆய்வில் ஈழத்தறி ஞர்கள் வரலாறு, பண்பாடு, சமூகம், கவிதையியல், அகத்திணை, புறத்திணை மரபுகள் என்று ஒப்பியல் ஆய்வை விரித்துச்சென்றுள்ளார்கள். அவை முன்னோடித் தன்மை கொண்டவையாகவும், பிற்கால ஆய்வுகளுக்குத் தூண்டலை வழங்குபவையாகவும் அமைந்துள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12967
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.