Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12966
Title: மருதக்கலிப் பாடல்களில் மகளிர் மாண்பு
Authors: Kumaran, E.
Keywords: மருதக்கலி;மகளிர்மாண்பு;கலித்தொகை;சங்கஇலக்கியம்;மகளிர்
Issue Date: 2021
Publisher: University of Jaffna
Abstract: கலித்தொகை சங்க இலக்கியங்களில் ஒன்றாகும். கலிப்பாவாலான 149 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இவை திணையடிப்படையில் பாலைக்கலி, குறிஞ் சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி என ஐந்தாக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்றாவதாக அமையும் மருதக்கலியில் முப்பத்தைந்து பாடல்கள் உள் ளன. இப்பாடல்களை இயற்றியவர் மருதன் இளநாகனார். மருதத்திணைக்குரியதான ஊடலை உரிப்பொருளாகக் கொண்டு இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மருதக்கலிப் பாடல்கள் தலைவனின் பரத்தையர் தொடர்பினால் கலக்கமுறும் தலைவியின் உணர்ச்சி வெளிப்பாடுகளாகவே பெரிதும் அமைந்துள்ளன. தோழி, பரத்தையர் என்னும் பெண்களும் அவர்களின் மனநிலைகளும் உளவெளிப்பாடுகளுங் கூட மருதக்கலியில் சித்திரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் பெண்களும் அவர்களது உணர்ச்சி மோதல்களுமே மருதக்கலியில் பிரதான பேசுபொருள்களாகின்றன. ஆக, சவால் நிறைந்த ஒரு வாழ்க்கைச் சூழலில் பெண்கள் எங்ஙனம் குடும்பக் கட்டமைப்பினைச் சிதையாமற் பேணிக்கொள்கின்றனர் உரிமையுடன் தலைவனது தவறுகளை எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றனர் எவ்வகையில் குடும்ப அங்கத்தவர் களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர் சமூகத்தில் தங்கள் மதிப்பையும் நற்பெயரையும் எப்படிப் பேணிக்கொள்கின்றனர் என்பதனை விரிவாக ஆய்வு செய்வதே இக்கட்டுரை யின் நோக்கமாகும். இவ்வாய்வு விவரண ஆய்வு முறையியலின் அடிப்படையில் மேற் கொள்ளப்படுகின்றது. மருதக்கலிப் பாடல்களைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பகுப்பாய்வு அணுகுமுறையும், அவற்றை மற்றைய சங்க இலக்கியப் பாடல்களுடன் ஒப்பிட்டு நோக் குதற்கு ஒப்பாய்வு அணுகுமுறையும் கையாளப்படுகின்றன. மருதக்கலிப்பாடல்கள் இவ்வாய்வின் முதன்மை மூலாதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. மருதத்திணை பற்றியதான ஏனைய சங்க இலக்கியப் பாடல்கள் மற்றும் ஆய்வாளர்களின் கட்டுரைகள். நூல்களில் உள்ள குறிப்புக்கள் என்பன துணை மூலாதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படு கின்றன. இக்கட்டுரையின் ஊடாகக் குடும்ப வாழ்க்கையில் பெண்களின் உரிமை, பொறுப்பு என் பவற்றையும் அவர்களின் மாண்பு மிக்க பண்புநலன்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12966
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.