Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12796
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorRajkumar, K.-
dc.contributor.authorSharveswara, R.-
dc.date.accessioned2026-07-31T05:07:14Z-
dc.date.available2026-07-31T05:07:14Z-
dc.date.issued2026-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12796-
dc.description.abstractபாததும்பர கோட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் உயர்தர வகுப்பு மாணவர்களின் வரவின்மையில் செல்வாககு; ச் செலுத்தும் மாணவர்சார் காரணிகளை ஆராயும் பொருட்டு அளவறிசார் ஆய்வு அணுகுமுறையில் இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. இக் கோட்டத்தில் க.பொ.த உயர்தர வகுப்பில் கற்கும் 450 மாணவர்களுள் 181 மாணவர்கள் படையாக்கப்பட்டு எழுமாற்று மாதிரி எடுப்பு அடிப்படையில் ஆய்வுக்கான மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தரவுகளை பெற்றுக்கொள்ள தரவுசேகரிப்புக் கருவியாக வினாக்கொத்து பயன்படுத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகளை விபரணப் புள்ளிவபரவியல் மற்றும் அனுமானப் புள்ளிவிபரவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது. மாணவர்களின் வாரத்திற்கான வரவுப்போக்கானது உயர்நிலையில் காணப்படுவதுடன் (M = 3.76> SD = 0.812) இரண்டாம்நிலைத் தரவுகளுடன் இதனை ஒப்பீடு செய்தபோது வாராந்த சராசரி வரவு 3 தொடக்கம் 4 நாள்கள் என கண்டறியப்பட்டது. வரவின்மையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளுக்கிடையிலான தொடர்புகளை சோதனை செய்தபோது (Correlations) தனியார் வகுப்புக்கள் - சமூக வலைத்தளப் பாவனை (r = .26), தனியார் வகுப்பு - வேலைக்கு செல்லல் (r = .17), வேலைக்குச் செல்லல் - சமூக வலைத்தளங்கள் (r = .15), அதிகாலைஎழுதல் - சமூகவலைத்தளப்பாவனை ( r = .18 ), ஆகிய காரணிகளிடையே பொருண்மையான நேர்த்தொடர்பும் இருப்பது வெளிப்படுத்தப்பட்டது. மாணவர்களின் வரவில் செல்வாக்குச் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளான தனியார் வகுப்புக்குச் செல்லல், வேலைக்குச் செல்லல், அதிகாலை எழுந்திருப்பதில் சிரமம் ஆகிய காரணிகளின் இடைப்பெறுமானமானது அவர்களின் பாலினத்தோடு பொருண்மையான வேறுபாட்டைக் காட்டுவதோடு உடல்நலப் பிரச்சினை, சமூக வலைத்தளங்களின் பாவனைக் காரணிகளில் பொருண்மையான வேறுபாடு காணப்படவில்லை. Multiple Regression Analysis மூலம் தனியார் வகுப்புக் காரணிகள்(B = - .160, p < . 05) வரவு வீதத்தில் பொருண்மையான எதிர் மறையான தாக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டதுடன் ஏனைய காரணிகள் ( p > .05 ) பொருண்மையான தாக்கத்தை செலுத்தவில்லை. இவ் ஆய்வு தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களின் பாடசாலை வருகைவீதத்தையும் ஏனைய பாடசாலை செயற்பாடுகளையும் பாதிக்காத வகையில் தமது நேர அட்டவணைகளைத் திட்டமிடல் வேண்டும் என்பதுடன் அரசாங்கம் பொருத்தமான கல்விக் கொள்கைகளை வகுத்தல், சமூக வலைத்தளங்களின் பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு வழிகாட்டல்-ஆலோசனை வழங்கல் மற்றும் பாடசாலை அடிப்படையிலான சுகாதார செயற்பாட்டு அமைப்புகளை நடைமுறைப்படுத்தல் போன்றவை பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectமாணவர்சார் காரணிகளின் செல்வாக்குen_US
dc.subjectஉயர்தர வகுப்பு மாணவர்கள்en_US
dc.subjectவரவுவீதம்en_US
dc.titleஉயர்தர வகுப்பு மாணவர்களின் வரவின்மையில் செல்வாக்குச் செலுத்தும் மாணவர்சார் காரணிகள்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:IRCE 2026



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.