Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12793
Title: ஒரு தசாப்த கால க.பொ.த உயர்தர சித்தி வீதப் பெறுபேறுகள்: ஓர் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
Authors: Kuhananthan, S.
Keywords: க.பொ.த. உயர்தரம்;கல்விச் சமத்துவம்;செயலாற்றுகை போக்கு பகுப்பாய்வு;மாறுபாட்டுக் குணகம்;போருக்குப் பிந்தைய கல்வி மீட்சி
Issue Date: 2026
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையின் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் சித்தி வீதங்கள், கல்வித் தரம் மற்றும் கல்விச் சமத்துவத்தை அளவிடுவதற்கான மிக முக்கியமான சுட்டியாக விளங்குகின்றன. போருக்குப் பிந்திய கடுமையான மீட்சி சூழலுக்கு உட்பட்ட வவுனியா மாவட்டத்தின் கல்விச் செயலாற்றுகை குறித்த முறையான அளவுசார் நெடுக்கு ஆய்வுகள் தற்போதைய ஆய்வு இலக்கியங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இந்த குறிப்பிடத்தக்க ஆய்வு இடைவெளியை நிரப்பும் நோக்குடன், 2016 முதல் 2025 வரையான ஒரு தசாப்த காலப்பகுதியில் தேசிய மட்டம், வட மாகாணம் மற்றும் வவுனியா மாவட்டம் என்ற மூன்று நிர்வாக மட்டங்களிலும் நிலவிய க.பொ.த. உயர்தரச் சித்தி வீதங்களை ஒப்பிட்டு விரிவாக ஆராய்வதும், செயலாற்றுகை போக்குகள், இடைவெளிகள் மற்றும் தொடர்பு கோலங்களை முறையாக கண்டறிந்து சான்று அடிப்படையிலான கொள்கை, பரிந்துரைகளை முன்வைப்பதும் இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும். இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுகள் விவரணப் புள்ளிவிவரவியல், காலத்தொடர் போக்கு பகுப்பாய்வு, ஒப்பீட்டு இடைவெளிப் பகுப்பாய்வு மற்றும் பியர்சன் தொடர்பு பகுப்பாய்வு ஆகிய நான்கு பகுப்பாய்வு முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவற்றிலிருந்து வட மாகாணத்தின் உயர்தர சராசரி சித்திவீதம் (66.07%) தேசிய உயர்தர சராசரி சித்திவீத்தை (65.31%) விட சிறப்பாகச் காணப்பட்டது. வவுனியா மாவட்டம் மிகக் குறைந்த சராசரி சித்தி வீதத்தையும் (64.38%) அதிக மாறுபாட்டுக் குணகத்தையும் (CV = 4.71%) கொண்டிருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மாவட்டம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது (-6.40 சதவீதப் புள்ளிகள்), இது தேசிய வீழ்ச்சியை (-2.45 சதவீதப் புள்ளிகள்) விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனினும், 2022-2024 காலப்பகுதியில் மூன்று மட்டங்களும் 67-68% வரம்பிற்குள் ஒன்றிணைந்தது கல்விச் சமத்துவத்தில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றது. எனினும், 2025 ஆம் ஆண்டின் இறுதி முடிவுகள் மூன்று மட்டங்களிலும் வீழ்ச்சியை பதிவு செய்தன் மூலமாக வவுனியா மாவட்டம் (64.07%) தேசிய சராசரி சித்திவீதத்தை விட (66.12%) கணிசமாகக் குறைவாகவும், கடுமையான வீழ்ச்சியையும் (-3.72 சதவீதப் புள்ளிகள்) சந்தித்துள்ளன. இது மாவட்டத்தின் கட்டமைப்பு ரீதியான பலவீனத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதால், வலய மட்ட கல்வி நிலைப்படுத்தல் திட்டம், நெருக்கடி தாங்கும் திறன் கொண்ட கட்டமைப்பு முதலீடு மற்றும் வட மாகாண வெற்றிக் காரணிகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அவசியமான கொள்கை பரிந்துரைகளாக முன்வைக்கப்படுகின்றன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12793
Appears in Collections:IRCE 2026



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.