Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12759
Title: கனிஸ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களின் விஞ்ஞான மனப்பாங்கு விருத்திநிலையில் 4C திறன்களின் தாக்கம்
Authors: Romina, M.A.
Piratheeban, K.
Keywords: 4C திறன்கள்;விஞ்ஞான மனப்பாங்கு;விஞ்ஞான கல்வி;கற்றல் அடைவு;விஞ்ஞான செயன்முறை
Issue Date: 2026
Publisher: Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka
Abstract: 4C திறன்கள் மற்றும் விஞ்ஞான மனப்பாங்கு என்பன 21ம் நூற்றாண்டில் கற்போரிடம் எதிர்பார்க்கப்படும் முக்கியகூறுகளாகும். ஆய்வானது கனிஸ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் விஞ்ஞான மனப்பாங்கு விருத்தி நிலையில் 4c திறன்களின் தாக்கத்தினை ஆராய்வதற்காக, அளவறி அணுகுமுறையிலமைந்த குறுக்குவெட்டு ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மடுக் கல்விக் கோட்டப் பாடசாலைகளுள் ஒன்பது பாடசாலைகள் அவற்றின் வகை அடிப்படையில் படைகளாக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டதுடன் அவற்றில் கனிஸ்ட இடைநிலைப் பிரிவில் கற்கும் 1084 மாணவர்களுள் 287 மாணவர்கள் பாலினை அடிப்படையாகக் கொண்ட விகிதாசார அடிப்படையிலான படைகொண்ட எழுமாற்று மாதிரியெடுப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வினாக்கொத்து மூலம் தரவு சேகரிக்கப்பட்டது. வினாக்கொத்தின் நம்பகமானது Cronbach's Alpha மூலமும் (a=.745) தகுதியானது Pearson இன் உருப்படி - மொத்த இணைபு முறை மூலமும் தீர்மானிக்கப்பட்டது. தரவுகள் விபரணம் மற்றும் அனுமானப் புள்ளிவிபரவியல் நுட்பங்களைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. கனிஸ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களிடையே விஞ்ஞான மனப்பாங்கு விருத்திநிலை உயர்வாகக் காணப்படுவதுடன் M = 3.67, SD = .47) அதன் விருத்திநிலையில் பால்நிலை (U = 5453, Z= 7.048, p= .001) மற்றும் கற்கும் தரம் (H = 41.081, p=.001) போன்ற காரணிகள் பொருண்மையான வகையில் செல்வாக்குச் செலுத்துகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அததுடன் அம்மாணவர்களிடையே 4C திறன்களின் விருத்திநிலை உயர்வாகக் காணப்படுவதுடன் M = 3.62, SD = .50) அவற்றின் விருத்திநிலையில் அவர்களின் பால்நிலை (U = 2135, Z=10.235, p=.001) மற்றும் கற்கும் தரம் (H = 13.565, p= .001) போன்றவை பொருண்மையான வகையில் செல்வாக்குச் செலுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. விளைவாக, விஞ்ஞான மனப்பாஙகுகளின் விருத்திநிலையில் அவர்களின் 4C திறன்விருத்திநிலையானது பொருண்மையான நேரான 64% செல்வாக்கினைக் கொண்டிருப்பதும் (F(1,95) = 507.26, β = .800, R2 = .640) இவ் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12759
Appears in Collections:Education

Files in This Item:
File Description SizeFormat 
KIRJ_19.pdf865.79 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.