Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12709
Title: நடையியல் நோக்கில் பாதுகை சிறுகதைத் தொகுதி
Authors: Nivethika, R.
Sivarani, S.
Keywords: பாதுகைச் சிறுகதைத் தொகுதி;மொழியியல்;நடையியல்;உத்தி முறைகள்;இலக்கிய ஆய்வு
Issue Date: Jul-2024
Publisher: University of Jaffna
Abstract: மொழியியலின் ஒரு பிரிவாக நடையியல் காணப்படுகிறது. ஓர் இலக்கியப் படைப்பின் வடிவம், கருத்து ஆகிய இரண்டிற்குமிடையே காணப்படும் உறவினை ஆராய்ந்து விளக்கிச் செல்வதை நோக்கமாகக் கொண்டதே நடையியலாகும். இதனடிப்படையில் டொமினிக் ஜீவா அவர்கள் 1962 இல் வெளியிட்ட ஈழத்து சிறுகதைத் தொகுதி இலக்கியமாக பாதுகை சிறுகதைத் தொகுதி காணப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளாக பாதுகை, நகரத்தின் நிழல், தாளக்காவடி, பாபச்சலுகை, மனத்தத்துவம், மிருகத்தனம், குறளி வித்தை, கைவண்டி, சவாரி, வாய்க்கரிசி, காகிதக்காடு முதலான பதினொரு சிறுகதைகள் காணப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் பெருமைகள், சிறுமைகள், ஆசைகள், நிராசைகள், போராட்டங்கள், சாதி அடக்குமுறை கட்டுபாடுகள், மனித விழுமியங்கள், உறவுகளின் முக்கியத்துவம் போன்றவற்றைக் கதைப் பொருளாகக் கொண்டு அவற்றை வெளிப்படுத்துவதாக இச் சிறுகதைத் தொகுதி அமைந்துள்ளது. மொழியியல் அடிப்படையில் எந்த ஒரு இலக்கிய படைப்பினையும் ஆராயும் போது அதில் கையாளப்பட்டுள்ள மொழியியல் சார்ந்த உத்தி முறைகளையும் மொழியியல் சாராத உத்தி முறைகளையும் வெளிக்கொணர்வது அவசியமாகும். அவ்வகையில் இவ்வாய்வானது டொமினிக் ஜீவா அவர்கள் பாதுகைச் சிறுகதைத் தொகுதியின் கருப்பொருளை வெளிப்படுத்தும் போது மொழியியல் சார்ந்த மொழியியல் சாராத உத்திமுறைகளை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதும் அதன் மூலம் டொமினிக் ஜீவா அவர்களுக்கேயுரிய அவரது தனித்துவம் மிக்க மொழி நடைப்பாணி, மொழியாற்றல் போன்றவற்றை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்விற்கான ஆய்வு முறையியலாக விபரண ஆய்வு முறை பின்பற்றப்பட்டுள்ளது. முதல் நிலைதரவாக பாதுகைச் சிறுகதைத் தொகுதியும் இரண்டாம் நிலைத்தரவுகளாக நடையியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் என்பவற்றி லிருந்தும் பெறப்பட்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மொழியியல் கூறுகளும் நடையியல் உத்தி முறைகளும் தெளிவாக வகைப்படுத்தப்பட்டு நடையியல் நோக்கில் முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12709
Appears in Collections:Cintanai 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.