Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12373
Title: தனியார் துறைகளில் பணிபுரியும் இளம்பருவப் பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவும் உளநலமும்
Authors: Diroshini, T.
Kajavinthan, K.
Keywords: பாலியல் தொந்தரவு;உளநலம்;தனியார் துறைகள்;பணியாற்றும் இளம்பருவப் பெண்கள்;பதகளிப்பு
Issue Date: 2025
Publisher: Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract: பாலியல் தொந்தரவு என்பது உலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரு பாரிய பிரச்சினையாகும். இதுபாலியல் தொந்தரவுக்குள்ளாவோரிடத்தில் பாதுகாப்புணர்வு, சுதந்திரத்தன்மை, ஒழுக்கசிந்தனை மற்றும் உளநலம் என்பவற்றில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கவல்லதாகும். பணியிடங்களில் பாலியல் தொந்தரவை எதிர்கொள்ளும் இளம்பருவப் பெண்களின் உளநலம் தொடர்பில் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு கொழும்பில் வெள்ளவத்தையை ஆய்வின் பிரதேசமாகக் கொண்டு பனிப்பந்து மாதிரி எடுப்பின் மூலமாக 80 ஆய்வு மாதிரிகளை உள்ளடக்கியதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் SEQ-W, MHI-18 அளவுகோல்களுடனும் இணைத்து சமூக குடித்தொகை மாறிகளும் உள்ளடக்கப்பட்டு பண்புசார் ரீதியான நேர்காணல்களும் மேற்கொள்ளப்பட்டு ஆய்விற்கான தகவல்கள் திரட்டப்பட்டன. ஆய்வின் முடிவுகளைப் பெறும்பொருட்டு அளவுசார் தரவுகள் SPSS, கருப்பொருள் பகுப்பாய்வின் ஊடாகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பகுப்பாய்வின்படி, தனியார் துறைகளில் பணியாற்றும் இளம்பருவப் பெண்கள் பணியிடங்களில் பாலியல் தொந்தரவினை எதிர்கொள்வதோடு (=22.15, p = .000) இது அவர்களது உளநலத்தில் 38% அளவு தாக்கத்தினை செலுத்துவதாகவும் மாதிரிகளின் உளநலப்பாதிப்பில் வேறுபாடு காணப்படுகின்றது (= 65.01, p=.000). மேலும், தனியார் துறைகளில் பணியாற்றும் இளம்பருவப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவு இனத்தினடிப்படையில் வேறுபடுவதோடு (p=.019) ஆய்வு மாதிரிகளின் உளநலமும் இனத்தினடிப்படையில் வேறுபடுகின்றது (p=.000). திருமணமாகாத இளம்பருவப் பெண்களே அதிகளவில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவினை எதிர்கொள்கின்றமையும் (p=.018) இனங்காணப்பட்டுள்ளது. பாலியல் வற்புறுத்தல் (38.0%) வடிவத்தின் மூலமான பாலியல் தொந்தரவினை அதிகளவில் எதிர்கொள்வதுடன் (p=.000) தனியார் துறைகளில் பணியாற்றும் இளம்பருவப் பெண்களின் உளநலம் ஒப்பீட்டளவில் பதகளிப்பின் (36.0%) தன்மையாலேயே அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகின்றனர் (p=.018). மேலும், மாதிரிகளின் வேலை அனுபவத்திற்கும் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் தொந்தரவிற்கும் இடையில் தொடர்புண்டு, தனியார் துறைகளில் பணியாற்றும் இளம்பருவப் பெண்களின் வயதினடிப்படையில் பணியிடங்களில் அவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்தரவில் வேறுபாடு காணப்படுகின்றது. எனவும் கண்டறியப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு, அவர்களின் ஆதரவற்ற தன்மை மற்றும் சக ஊழியர்களின் அத்துமீறிய நடத்தைகள் போன்ற காரணிகள் இளம்பருவப் பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பணியிடங்களில் இளம்பருவப் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை சகித்துக்கொள்ளக் காரணங்களாக, புகாரிற்கு பின்னர் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்த பயம், வேலை இழப்பு, நிறுவனம் தம்மை புறந்தள்ளி ஒதுக்கிவிடும் எனும் பயவுணர்வு, பொருளாதார சார்பு நிலை, புகாரிற்கு பின்னர் எதுவித எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்காமையால் மேற்கொண்டு புகாரளிக்கும் ஊக்கம், அது குறித்த நம்பிக்கை இன்மையும் காரணிகளாக அமைவதை இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12373
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.