Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12273| Title: | மாணவர்களின் கல்விச் செயல்திறனில் எதிர்காலம் பற்றிய பதகளிப்பின் தாக்கம் |
| Authors: | Nishalini, R. Rajkumar, A. |
| Keywords: | எதிர்காலப் பதகளிப்பு;கல்விச் செயல்திறன்;எதிர்காலத்தைப் பற்றிய எதிர்நிலையான பார்வை;கல்வி;மாணவர்கள் |
| Issue Date: | 2025 |
| Publisher: | Faculty of Arts University of Jaffna, Sri Lanka |
| Abstract: | பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் வாழ்க்கை, ஆளுமை, தடைகளை கடக்கும் திறன், சமூகமயமாக்கல் என்பவற்றைப் பாதிக்கின்றது. இவ்வாய்வானது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகக் கல்லூரியை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பற்றிய பதகளிப்பு அவர்களின் கல்விச் செயல்திறனில் ஏற்படுத்தும் தாக்கத்தினை ஆராய்தல் எனும் ஆய்வின் நோக்கத்தின் அடிப்படையில் அளவுசார் ஆய்வு வடிவத்தில் மொத்தக் குடித்தொகை மாதிரி அடிப்படையில் மாணவர்கள் 80 பேர் ஆய்வு மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். ஆய்வு மாதிரிகளிடமிருந்து தரவுகள் எதிர்கால பதகளிப்பு, கல்விச் செயல்திறன் என்ற அளவுகோல்கள்;, ஆய்வாளனால் சுயமாக தயாரிக்கப்பட்ட சுயவிபர வினாத்தாள் என்பவற்றின் ஊடாகப் பெற்றுக் கொள்ளப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் சமூக விஞ்ஞானத்துக்கான புள்ளி விவரப் பகுப்பாய்வு மென்பொருளின் ஊடாக (SPSS – 21) புள்ளி விபரவியல் சோதனைகளான பிற்செலவுப் பரிசோதனை, ஒரு மாதிரி பரிசோதனை, Anova, இணைப்பகுப்பாய்வு, விபரணப் பகுப்பாய்வு மற்றும் அனுமானப் பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவுகளாகப் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் மிதமான எதிர்காலம் பற்றிய பதகளிப்பைக் கொண்டுள்ளனர் (P=.000, 83.8%). பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களிடையே கற்றல் செயல்திறனில் எதிர்காலம் பற்றிய பதகளிப்பு செல்வாக்குச் செலுத்துகிறது (P=.005, R2=8.6%, F=8.480). மாணவர்களிடையே எதிர்காலம் பற்றிய பதகளிப்பின் அடிப்படையில் கற்றல் செயல்திறனில் வேறுபாடு காணப்படுகின்றது (P=.009,F=5.061). மாணவர்களிடையே எதிர்காலம் பற்றிய பதகளிப்பில் எதிர்காலத்தைப் பற்றிய எதிர்நிலையான பார்வை தாக்கம் செலுத்துகின்றது (P=.000,F=35.468, R2=30.4%). மாணவர்களிடையே எதிர்காலம் பற்றிய பதகளிப்பில் பால்நிலை அடிப்படையில் வேறுபாடு காணப்படவில்லை (ஆண்கள் சராசரி =2.98, பெண்கள் =2.95,P=.784,F=1.330). பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுடைய கற்றல் செயல்திறனிற்கும் பாடப்பிரிவிற்கும் தொடர்பு காணப்படுகின்றது (r=-.341,P=.002) போன்ற முடிவுகள் பெறப்பட்டன. பல்வேறு தொழில்துறைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி மாணவர்களின் உளநலம் பற்றி ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பதகளிப்பைக் குறைத்து வேலைவாய்ப்புகள் பற்றிய விளக்கம், பொருளாதாரச் சிக்கல்கள், சமூக அழுத்தம், எதிர்காலம் பற்றிய எதிர்மறையான பார்வையை குறைத்து அவர்களின், உளநலனைப பாதுகாத்து எதிர்காலம் பற்றிய புரிதலை சரி செய்து கல்விச் செயல்திறனை மேம்படுத்தும் வழிவகைகளைக் கையாளுவதன் ஊடாக அவர்களை உளப்பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கலாம். |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12273 |
| Appears in Collections: | URSA 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| மாணவர்களின் கல்விச் செயல்திறனில் எதிர்காலம் பற்றிய பதகளிப்பின் தாக்கம்.pdf | 183.74 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.