Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12259| Title: | கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் சமுதாயப் பங்கேற்பிற்கான சவால்கள்: யாழ் மாவட்ட அனலைதீவுக் கிராமத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் ஆய்வு |
| Authors: | Dharshika, E., Vipulan, P. |
| Keywords: | கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள்;சமுதாயப் பங்கேற்பு;கிராமிய வறுமை |
| Issue Date: | 2025 |
| Publisher: | Faculty of Arts University of Jaffna, Sri Lanka |
| Abstract: | யாழ் மாவட்ட அனலைதீவு J/37 மற்றும் J/38 கிராம சேவக பிரிவில் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் சமுதாய பங்கேற்பில் பல்வேறுபட்ட சவால்கள் காணப்படுகின்றன. இவ்வாய்வானது அனலைதீவுக் கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்களில் சமுதாயப் பங்கேற்பின் தன்மையினையினையும், அதற்கான சவால்களையும் இனங்கண்டு, அபிவிருத்தித் திட்டங்களில் சமுதாய பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்விற்காக முதலாம் நிலை தரவு சேகரிப்பு முறைகளாகக் களஆய்வு, நேர்காணல், இலக்குக் குழுக் கலந்துரையாடல் போன்றனவும, இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு முறைகளாக J/37 J/38 கிராம சேவக அறிக்கைகள், கையேடுகள், ஊர்காவற்துறை பிரதேச செயலக அறிக்கைகள், கிராமிய ஆய்வு கட்டுரைகள், போன்றனவும் சேகரிக்கப்பட்டு அவை விபரண பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டது. ஆய்வின் மூலம் இக்கிராமத்தின் சமுதாய பங்கேற்பிற்கான சவால்களாக கிராமிய வறுமையும் அதனால் ஈடுபாட்டில் நாட்டமின்மையும், அதிகரித்த இடப்பெயர்வு, கல்வியறிவின்மை, வரையறுக்கப்பட்ட அரச ஆதரவு, சமூக தொடர்பின்மை, தலைமைத்துவ அதிகார அசமந்த நிலை, பாலின வேறுபாடு, நிதி வெளிப்படைத் தன்மையின்மை, புவியியல் சார் தடைகள், ஆகியன சவால்களுக்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டன. குறித்த ஆய்வில் திட்டத்தை அமுல்படுத்தும் போது சமுதாய உறுப்பினர்களுக்கு திட்டம் தொடர்பான புரிதலை வழங்கி அதில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படல், கிராமிய கலாச்சாரம் பாதிக்காது அபிவிருத்தி திட்டங்களுடன் இணைந்து செயற்படல், கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்துதல், அரசாங்கம் நிலையான திட்டங்களை செயற்படுத்துவதற்குரிய முக்கிய பங்கினை வகித்தல், கீழ்மட்ட அணுகுமுறையை (டீழவவழஅ-ருp யுppசழயஉh) கிராமியத் திட்டமிடலில் பயன்படுத்தல் என்பனவற்றை நடைமுறைப்படுத்துகின்ற போது இக்கிராமத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் சமுதாய பங்கேற்பினை வலுப்படுத்தமுடியும் |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12259 |
| Appears in Collections: | URSA 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் சமுதாயப் பங்கேற்பிற்கான சவால்கள்.pdf | 178.99 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.