Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12027| Title: | கிறிஸ்தவ இறையியல் பார்வையில் பொது இடங்களில் வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழற் பாதிப்பு (யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதி) |
| Authors: | Dhevananth, A. |
| Keywords: | இறைவன்;இயற்கை;குப்பை;சுற்றுச்சூழல் பாதுகாப்பு |
| Issue Date: | 2024 |
| Publisher: | University of jaffna |
| Abstract: | சமகால சமூகத்தின் முதன்மை பிரச்சனைகளில் பொது இடங்களில் வீசப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதனால் ஏற்படும் விளைவுகளும் ஒன்றாகும். யாழ் மாநகர பிரதேசத்தில் அநேக இடங்களில் வீதியோரங்களில் மக்கள் பொறுப்பற்ற செயற்பாடான குப்பைகள் வீசுதல், பொலித்தீன் பிளாஸ்ரிக் சரியான ரீதியில் பிரித்து குப்பைகளை வேறாக்காமை, வீதியோரங்களிலும் பாவனை அற்ற காணிகளிலும் குப்பைகளை எறிதல், சுய நல நோக்கில் தனது வீட்டை சுத்தமாக்கி கொண்டு அயலை அசிங்கப்படுத்துதல், சமூகத்தில் நடைபெறும் கலைவிழாக்கள் கொண்டாட்டங்கள் என்பனவற்றில் குப்பைகளை தகுந்த இடத்தில் போடாமை போன்ற பிரச்சனைகளை அவதானிக்கின்றோம். இதனால் பெரும் தீமைகளையும் விளைவுகளையும் மக்களே சந்திக்கினறனர். இந்நிலையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும் கடந்த 5 ஆண்டுகளில் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதேசத்திற்குள் அதிகளவு குப்பைகள் வீதிகளிலும் கரைஓரங்களிலும் மற்றும் வடிகால்களிலும் தேங்கி நிற்பதையும் இதனால் டெங்கு, வயீற்றோட்டம், காய்ச்சல், நீர் மாசடைதல், குடி நீர் தட்டுப்பாடு, மிருகங்களின் மரணங்கள் போன்றன நிகழ்வதையும் அறிய முடிகின்றது. இதற்கான தரவுகளை யாழ் மாநகர சபை கழிவகற்றும் பகுதி அறிக்கைகள், பிரதேச செயலக தரவுகள், வைத்தியசாலை அறிக்கைகள், மற்றும் இணையத்தள அறிக்கைகள், பத்திரிகை தரவுகள், சஞ்சிகைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவ்வாய்வுப் பிரச்சனையை தெளிவான முறையில் விளக்குகின்ற விபரண ஆய்வாக இது அமைந்துள்ளது. இவ் ஆய்வானது எண்ணியம் சார் தரவுகளையும் பண்பு சார் தரவுகளையும் அடிப்படையாக கொண்ட கலப்பு முறை ஆய்வாக காணப்படுகின்றது. நாம் வாழும் சுற்றுச்சூழல் ஆனது திருத்தூதரான பவுல் கூறியது போல இந்நாள் வரை படைப்புக்கள் அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்று தவிக்கின்றது. இங்கே பவுல் படைப்பு ழுழுவதையும் சுட்டிக்காட்டுகின்றார். இந்த படைப்பு வேதனையுற்று தவிப்பதற்கு மனிதர்கள் பொறுப்பாளிகளாக இருக்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்பதை மனிதன் மறந்துவிட்டான். இப்போது இந்த பூமி தவறாக நடத்தப்படுவதனால் வருந்துகின்றது. படைப்பிலும்இ இயற்கையிலும் படைத்தவரோடு தங்களுக்கு இருக்கும் பொறுப்பையும் கடமைகளையும் மக்கள் இறைவனின் பார்வையில் இயற்கையை பார்க்க ஒவ்வொரு மனிதனும் முன்வரவேண்டும். படைப்புக்களுக்கெல்லாம் சிகரமாக மனிதன் தான் சார்ந்த இடத்தையும் சுற்றுச் சுழலையும் பாதுகாப்பதுடன் வீட்டுக்கழிவுகளை சரியான முறையில் பிரிப்பதும் மீள் சுழற்ச்சிக்கு பயன்படுத்த தூண்டுவதும் தேவையான சரியான பாதுகாப்பின் அடிப்படையில் நுகர்வுகலாச்சரங்களை மாற்றுவதும் தேவையற்ற பிளாஸ்ரிக் பாவனைகளை தவிர்ப்பதும் போன்ற விடயங்களை இறையியல் சார் எண்ணங்களுடன் எடுத்துரைப்பதுடன் இவற்றின் அடிப்படையில் மனிதர் தாம் வாழும் இருப்பிடம் சார் சூழலை பாதுகாப்பது என்பது தம்மைப் படைத்த இறைவனின் எதிர்பார்ப்பு என்பதை உணர்ந்து சுற்றுச் சூழல் இறையியலை தமது வாழ்வில் கடைப்பிடித்து தம் சுற்றுச்சூழலை கர்ப்ப வேதனையில் இருந்து மீட்டெடுக்க அழைப்பதே இவ்வாய்வின் முடிவு. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12027 |
| Appears in Collections: | 2024 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| பொது இடங்களில் வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழற் பாதிப்பு.pdf | 212.36 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.