Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11945
Title: கிறிஸ்தவப் பார்வையில் தற்கொலை (5ம் கட்டளையை மையப்படுத்திய பார்வை)
Authors: Grace, A.P.
Keywords: மனிதர்;பாவம்;தற்கொலை;பிரச்சினை;சமூகம்;இறைவன்
Issue Date: 2024
Publisher: University of jaffna
Abstract: சமகால சமூகத்தின் முதன்மையான பிரச்சினைகளில் தற்கொலையும் ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வாய்வானது யாழ் மாவட்டத்தில் 2019 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியில் இடம் பெற்ற தற்கொலையின் போக்குகளும், அதற்கான அடிப்படைக் காரணங்களின் மட்டிலான 5ம் கட்டளையை மையப்படுத்திய பார்வையாக காணப்படுகிறது. இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் தற்கொலை என்பது சாதாரணமாக நிகழ்ந்தேறும் ஒரு செயலாக காணப்படுவதுடன், அவற்றுள் அதிகமான இளைஞர்களே இவ்வாறான செயற்பாடுகளில் பெரிதும் ஈடுபடுகின்றனர். இதில் மாணவர்களும் அதிக அளவில் தற்கொலை செய்துள்ளார்கள் என கண்டறிய முடிகின்றது. யாழ்மாவட்டத்தில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறுகின்றன என்பதை கடந்த 5 ஆண்டுகளின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கான தரவுகளாக பொலிஸ் நிலைய தற்கொலை தகவல்கள் அடங்கிய அறிக்கைகள், வைத்தியசாலை அறிக்கைகள், பிரதேச செயலக தரவுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு, தொகுத்தறி முறையியலான ஆய்வாகவும் இது அமைந்துள்ளது. தற்கொலைகள் அந்த நேரத்தில் இருக்கக்கூடிய மனநிலைகளையே சார்ந்துள்ளன. யாழ்மாவட்டத்தில் அண்மைக்காலமாக நபர் ஒருவரின் சிந்தனையாலும், உளநிலையில் ஏற்படும் மாற்றத்தினாலும் தற்கொலை அதிகம் இடம்பெறுகின்றது எனக் கூறப்படுகிறது. இதனால் மனித உயிரின் மாண்பானது இங்கு வீழ்சச்pயடைவது அதிகரிக்கின்றமை இங்குள்ள பிரச்சினையாக கண்டறியப்படுகிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தற்கொலையானது கிறிஸ்தவப் பார்வையில் எடுத்துரைக்கப்பட்டு மனித உயிர் எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு சவாலும் எவ்வாறு இறைசாயலை வீழ்ச்சியடையச் செய்கின்றது எனவும், மனித உயிரின் மாணபுபற்றி ஆழப்படுத்துவதோடு, மனித உயிரினுடைய மாண்பினை தற்கால சமுதாயத்திற்கு எடுத்துரைத்தலும், மனித உயிர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தலும் ஆய்வின் நோக்கமாகும். படைப்புகளுக்கெல்லாம் சிகரமாக படைக்ப்பட்ட மனிதர், இறைவன் அளித்த விலை மதிப்பில்லாத உயிர்க்கொடையை மாய்த்துக் கொள்வது பெரும் பாவமாகும். அன்றைய யூத சட்டத்தின்படி தற்கொலை செய்தலானது பாவங்களுக்குள் பெரும் பாவமாக கணிக்கப்பட்டது. இன்று கிறிஸ்தவ சமயபோதனைகளும் தற்கொலையை முற்றிலும் தடைசெய்கின்றது. மனிதர் தன்னைத்தான் கொலை செய்வதும், அயலவனை கொலை செய்வதும் கடவுள் அருளிய ஐந்தாம் கட்டளையை மீறி செயற்படும் பாவமாகும். மனித உயிரை அழிப்பது கடவுளின் திட்டத்திற்கு எதிரானது என்ற மனநிலை உருவாகினால் மாண்பு நிலைநாட்டப்படும். இதனால் மனிதர்களிடையில் சிந்தனைசார் வளர்ச்சி விரிவடையும். எந்த பிரச்சினைகளுக்கும் தற்கொலையானது தீர்வாகாது என்ற மனநிலையை அவர்களிடையே உண்டு பண்ணுதல் வேண்டும். எமது அன்றாட வாழ்வில் நடைபெறும் துன்பங்களை கண்டு துவண்டு போகாமல் அதனை சவாலாக எடுத்து சாதனை புரிவதே கடவுள் எமக்கு அளித்த வாழ்க்கையாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11945
Appears in Collections:2024

Files in This Item:
File Description SizeFormat 
கிறிஸ்தவப் பார்வையில் தற்கொலை.pdf202.89 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.