Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11941| Title: | செங்கடல் - நந்திக்கடல் - கடந்து செல்லல்: ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய ஒரு பார்வை |
| Authors: | Kennady, M. |
| Keywords: | செங்கடல்;நந்திக்கடல்;கடத்தல்;விடுதலைப் போராட்டம்;இறையியல் |
| Issue Date: | 2024 |
| Publisher: | University of jaffna |
| Abstract: | மனித வாழ்வில் நினைவு கூரல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வரலாற்றில் அவைகள் மனிதருக்கு பல்வேறுபட்ட தகவல்களை கூறுகின்றன. இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயண வரலாறு ஒரு தனித்துவமான வரலாறு ஆகும். இஸ்ரயேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் அடிமைத்தனம், விடுதலை, செங்கடலைக் கடந்து செல்லல், சீனாய் மலை உடன்படிக்கை போன்றவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் மக்களுடைய வரலாறும் இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றுடன் தொடர்புடையதாக நோக்கப்படலாம். இஸ்ரயேல் வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாகச் செங்கடலைக் கடந்து செல்லல் காணப்படுகின்றது. இந்நிகழ்வு விடுதலைப் பயண நூலில் மாத்திரமன்றித் திருப்பாடல் மற்றும் இறைவாக்கினர் நூல்களிலும் காணப்படுவதால் அது எந்த அளவிற்கு அவர்களுடைய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது உய்த்துணரப் படலாம். செங்கடல் நிகழ்வில் இஸ்ரயேல் மக்கள் அதனைக் கடக்கும் முன்பதாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டனர். எகிப்தியப் படையணி அவர்களை விரட்டிக் கொண்டு வந்தது. இந்நிலையில் இறைத் தலையீட்டுடன் செங்கடலைப் கடந்ததாக விவிலியம் கூறுகிறது. விரட்டி வந்த எகிப்தியப் படைகள் கடலுக்குள் மூழ்கின. இவர்களின் இழப்பைப் பற்றி இஸ்ரயேலரின் வரலாறு மாத்திரம் குறிப்பிட்டு நிற்கும்போது எகிப்திய ஏடுகள் மௌனம் சாதிக்கின்றன. இதன் மூலம் இழப்பின் கொடூரத் தன்மை, கடினத்தன்மை போன்வற்றை உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்ட வரலாறு நீண்டது. இதில் இடம்பெற்ற நந்திக் கடல் நிகழ்வு வரலாற்றுக்குள் ஒரு வரலாறு ஆகும். இது ஒரு தகவல் சார்ந்த அனுபவமாக இல்லாமல் அனுபவம் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. செங்கடலுக்கு முன்பாக இஸ்ரயேல் மக்கள் நிராயுதபாணிகளாக நின்றதைப் போல நந்திக் கடல் அருகே தமிழ் மக்கள் நிராயுதபாணிகளாக நின்றனர். பசி, தாகத்துடன் அதனைக் கடக்க முற்பட்ட வேளையில் துப்பாக்கி வேட்டுக்களால் அவர்களின் இரத்தம் நந்திக் கடலிலே கலந்து செங்கடல் போலக் காட்சியளித்தது. ஓர் ஆய்வாளனாக செங்கடலுக்கும் நந்திக்கடலுக்கும் இடையேயுள்ள வரலாற்றை விடுதலைப் பயண ஒளியில் ஆய்வு செய்ய முற்படுகிறேன். இவ் ஆய்வு எனது அனுபவத்துடன் இணைந்தது. என்னுடன் இணைந்து நந்திக்கடல் அனுபவத்தைப் பெற்ற ஏனைய மக்களின் தனித்துவமான அனுபவமும் இதில் இணைந்துள்ளது. இவைகள் விடுதலைப் பயணநூலை மையமாகக் கொண்டே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு இலக்கை அடைவதற்கு ஏனைய நூல்கள், சஞ்சிகைகள், நேர்காணல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வு எதிர்காலத் தமிழரின் தலைமுறைகளுக்கு நினைவு கூரல்களுக்கான ஆவணமாக அமையும். |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11941 |
| Appears in Collections: | 2024 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| செங்கடல் -நந்திக்கடல் கடந்து செல்லல்.pdf | 211.67 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.