Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11183
Title: | யாழ்ப்பாணம் இயலிசைவாரிதி ந.வீரமணிஐயரின் திருக்குறள் கீர்த்தனைகள் நூலிலுள்ள பாடல்கள் புலப்படுத்தும் திருவள்ளுவம் |
Authors: | Karuna, K. |
Keywords: | திருக்குறள்;கீர்த்தனை;பாடல்;இசை;வாக்கேயகாரர் |
Issue Date: | 2024 |
Publisher: | முத்தமிழ்ச் சங்கம் |
Abstract: | தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களும் பிற்காலத்தில் எழுந்த கீர்த்தனை, பதம், தில்லானா போன்ற இசைவடிவங்களும் எல்லோராலும் பாடப்பட்டுவரும் முறையான இசையமைப்புக்கள் கொண்டவை. இவற்றிற்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் சங்கப்பாடல்கள், காப்பியப் பாடல்கள், பக்தி இலக்கியப்பாடல்கள் இசையுடன் பாடப்படுவது மிக அரிது. இந்த வகையில் திருவள்ளுவரின் திருக்குறள் பாடல்கள் ஒப்பற்ற நீதிப்பாடல்களாகத் திகழ்கின்றன. இன்றைய உலகில் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற க்குறள் பாடல்களில் சில அதிகாரங்கள் இசைக்குறியீடுகளுடனும் வெளிவந்துள்ளன. ஆயினும், இரத்தினச் சுருக்கமாக இருக்கும் திருக்குறளின் பொருளைக் கருவாகக் கொண்டு பாமரரும் விளங்கக்கூடிய பாடல்களை இயற்றமுடியும், இவற்றைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்யமுடியும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இந்த ஆய்வு நகர்த்தப்படுகின்றது. யாழ்ப்பாணம் தந்த மிகப் பெரிய தமிழ் வாக்கியக்காரரான பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயரின் திருக்குறள் கீர்த்தனைகள் ஆய்வுக்கான மூல நூலாக எடுக்கப்படுகின்றது. வீரமணி ஐயாவின் திருக்குறள் கீர்த்தனைகள் சாதாரண மக்களும் திருக்குறளைப் புரிந்து கொள்ளும் வகையில் தனித்தமிழ் பாடல்களாகவும் இசைக்கக் கூடிய பாடல்களாவும் உள்ளமையை வெளிக்கொணர்வது இவ்ஆய்வின் நோக்கமாகும். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11183 |
Appears in Collections: | Department of Music |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
யாழ்ப்பாணம் இயலிசைவாரிதி ந.வீரமணிஐயரின் திருக்குறள் கீர்த்தனைகள்.pdf | 2.38 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.