Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10982
Title: ஓலைச்சுவடிகளை எண்ணிமப்படுத்தலும் பாதுகாத்தலுக்குமான செயற்றிட்டம்
Authors: Kapeshan, M.
Kupeshan, R.
Keywords: ஆவணப்பாதுகாப்பு;ஆவணப்பராமரிப்பு;ஓலைச்சுவடி;எண்ணிமப்படுத்தல்
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: மனிதஇனம்தோன்றிஅவற்றின்பரிணாமவளர்ச்சிகாரணமாகஅறிவுவிருத்தியடையத்தொடங்கியது. இவ்அறிவு விருத்தியானது ஆரம்பகாலங்களில் ஒலிகளாகவும், குறியீடுகளாகவும் பரிமாறப்பட்ட போதும் பிற்காலத்தில் அவை எழுத்து வழக்கிற்கு மாற்றமடைந்தன. இவ் எழுத்து வழக்கின் வளர்ச்சியும் மனிதவிருத்தியுடன் தொடர்புபட்டதாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பகாலங்களில் மனிதன் தனது அறிவைப் பரப்புவதற்கு எழுத்து ஊடகமாகக் கற்பாறைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட களிமண் தகடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தினாலும் காகிதங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட புற்களையும், ஓலைச்சுவடிகளையும் அறிவை பரப்புவதற்கான ஊடகமாக மனிதன் பயன்படுத்தினான். பெறுமதிமிக்க தகவல் வளங்களாகவும், வரலாறு மற்றும் கலாசாரம் என்பவற்றை உள்ளடக்கிய வகையிலும் மனித அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக ஓலைச்சுவடிகளின் தொகுப்பு காணப்படுகின்றது. . இவ்வாறு பயன்படுத்தப்பட்ட (Niளாயவொi ரூ றுதையலயளரனெயசயஇ 2022) ஓலைச்சுவடிகள் இலங்கையில் தற்போதுவரை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்களிடையே முறையான வகையிலும் முறைசார்பற்ற வகையிலும் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ஆறுமுகநாவலர் போன்றவர்களால் சுவடிகள் பலவும் நூல்களாக பதிப்பிக்கப்பட்டபோதும் எண்ணற்ற சுவடிகள் இன்றுவரை முறையாகப் பதிப்பிக்கப்படாமல்சுவடிகளாகவேதொடர்ந்தும்காணப்படுகின்றன. மேற்படி சுவடிகளைப் பாதுகாத்து, பராமரித்து, அவற்றில் உள்ள விடயதானங்களை அடுத்த தலைமுறையினரிடம்கையளிக்கவேண்டியதேவைகாணப்படுகின்றது.அந்தவகையில்,யாழ்ப்பாணப் பல்கலைக்ககழக வித்தியானந்தன் நூலகத்தில் சுமார் 207 ஏட்டுச்சுவடிகள் (24,607 தனித்தனி ஓலைகளைக் கொண்டது) சேகரிக்கப்பட்டு, பாதுகாத்து, பராமரிக்கப்படுகின்றன. இச்சேகரிப்பில் சித்தவைத்தியம், சோதிடம், இலக்கியம், விலங்கு வைத்தியம், வரலாறு, மொழி போன்ற பல விடயப்பரப்புக்கள் சார்ந்த சுவடிகள் காணப்படுகின்றன. இச்சுவடிகளை எண்ணிமப்படுத்தி, பாதுகாத்து அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டதாக சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நம்பிக்கை நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து எண்ணிமப்படுத்தும்செயற்றிட்டம்காணப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10982
Appears in Collections:ETAKAM 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.