Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10454
Title: தேவாரப் பண்களில் மருத்துவ மாண்புகள்
Authors: Karuna, K.
Keywords: தேவாரம்;மருத்துவம்;பண்;திருமுறை;அற்புதம்
Issue Date: 2018
Publisher: University of Jaffna
Abstract: தேவாரங்களில் பல பண்களும் பல அற்புதங்களும் இடம்பெற்றிருந்தாலும் மருத்துவப் பண்பு சார்ந்த பண்களையும் தேவாரங்களையும் அற்புதங்களையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பல்லவர் காலம் பக்தியை அடிப்படையாகக் கொண்டது. இக்காலத்தில் எழுந்த தேவாரங்கள் சைவத்தின் சமூக, சமய, தத்துவ, இசை சார்ந்த வளர்ச்சிக்கும். மக்களையும், மன்னர்களையும் சைவத்தின்பால் ஈர்த்து மீட்டுருவாக்கம் செய்வதற்கும் வித்திட்டன. தேவார முதலிகளான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஒவ்வொரு ஊராகச் சென்று தலங்கள் தோறும் மொழி உணர்வையும், சமய உணர்வையும், பிரதேச உணர்வையும் தூண்டி இவற்றினூடாக சைவத்தின் சிறப்புகளை எடுத்தியம்புவதுடன் இசையின் மருத்துவ குணங்கள் உள்ளிட்ட மேன்மைகளையும் தங்கள் பாடல்கள் மூலம் புலப்படுத்தினார்கள். இப்பாடல்களும், கருத்துக்களும் பாமர மக்கள் வரை சென்றடைவதற்கும், மக்களைக் கவர்வதற்கும் பண்கூட்டிப் பாடப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு தலத்திற்கும் சென்று பாடும்போது "இறந்த அடியார்கள் உயிர்பெற்றமை” “தீராத நோய்கள் குணப்பட்டமை” ஆகிய அற்புதங்கள் நிகழ்ந்தன. இவ்அற்புதங்களும் பண் கூட்டிப்பாடிய இசையும் சமணமத ஆதிக்கத்தினுள் சென்ற மக்களை சைவத்தின் பால் ஈர்க்கப் பெரிதும் உதவின. அவர்கள் ஒவ்வொரு தலத்திற்கும் சென்று பதிகம் பாடும்போது அற்புதங்களும் நிகழ்ந்த காரணத்தால், இப்பாடல்களும், கருத்துக்களும் செவிநுகர் கனிகளாக மக்களைச் சென்றடைந்தன. இத் தேவார முதலிகளின் பாடல்கள் அடங்கிய திருமுறைகளில் காணப்படும் மேன்மைகள், மருத்துவம், ஏனைய பிணி நீக்கம் சார்ந்த அளப்பரிய அற்புதங்களின் அடிப்படையிலும், பண் வகைகளின் அடிப்படையிலும் இவ் ஆய்வில் கூறப்படுகிறது. இவ் ஆய்வில் பகுப்பாய்வு முறையும் ஒப்பீட்டு முறையும் பின்பற்றப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10454
Appears in Collections:Department of Music



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.