Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10376
Title: இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிற்பிரபந்தங்களின் பொருண்மைகள்
Authors: Thayalini, K.
Keywords: கோயிற்பிரபந்தம்;இணுவில்;பொருண்மைகள்;பரராஜசேகரப்பிள்ளையார்;ஈழம்
Issue Date: 2023
Publisher: University of Jaffna
Abstract: ஈழத்து இலக்கிய வரலாற்றை நோக்கும்போது கோயிலை நிலைக்களனாகக் கொண்டு இலக்கியங்கள் எழும் மரபு உண்டு. கோயிலை அடிப்படையாகக் கொண்டு பிரபந்தங்கள் அதிகள வில் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வகையில் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலிலுடன் தொடர்புற்றும் பல்வேறு இலக்கியங்கள் உருவாகின. இவற்றுள் கோயிற்பிரபந்தங்கள் தனித்துவ மானவை ஆகும். இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்தில் தோன்றிய கோயில் ஆகும். இக்கோயிலானது மூர்த்தி தல வரலாற்றுச் சிறப்புக்களை உடையது. இச்சிறப்புக்களினைக் கொண்டு ஈழத்து மரபில் இலக்கியங்கள் தோன்றும் பின்னணியில் கோயிற்பிரபநத்ஙக்ள்பரராஜசேகரர்மீதுபாடபப்டட்து.இவவ்hறுபாடபப்டட்பிரபநத்ஙக்ளேஇணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் பிரபந்தங்கள் ஆகும். பிள்ளையாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஆக்கப்பட்ட பரராஜசேகரப்பிள்ளையார் பிரபந்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலப் பரப்பில் வௌ;வேறு புலவர்களால் பாடப்பட்டன. திருவிரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை, ஊஞ்சல், பாமாலை, போற்றிப்பத்து, கீர்த்தனைகள், பதிகம் எனும் பிரபந்த அமைப்பிலேயே பிரபந்தங்கள் பரராஜசேகர கோயில் மீதும் பாடப்பட்டன. இப்பிரபந்தங்கள் பிள்ளையாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அமைந்தாலும் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டு விளங்குகின்றன. பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் பிரபந்தங்கள் வரலாற்று நிலையிலும் மூர்த்தி தலச் சிறப்பினைப் பேசும் தன்மையிலும் முக்கியம் பெற்றவையாக விளங்குகின்றன. இவ்வாலயம் தொடர்பாக எழுந்த பிரபந்தங்கள் முதன்மை ஆதாரமாகவும் பிரபந்தங்கள், பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக எழுந்த கட்டுரைகள் துணைநிலை ஆதாரங்களாக வும் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது. பரராஜசேகரப்பிள்ளையார் பிரபந்தங்களில் காணப் படும்பொருண்மைகளைக்கண்டறிதலும்அதனூடாகஅவற்றின்மேன்மைபேசுவதும்இந்தஆய்வின் நோக்கமாக உள்ளது. பரராஜசேகரப்பிள்ளையார் பாடல்களைத் தொகுத்தும் பகுத்தும் தருவதற்குப் பகுப்பாய்வு முறையியலும் கருத்துக்களை விளக்குவதற்கு விளக்கமுறை முறையியலும் வரலாறு சார் விடயங்களினைப் பதிவு செய்வதற்கு வரலாற்று ஆய்வு அணுகுமுறையும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் பிரபந்தங்கள் மூலம் சமூக சமயநிலைகள், பண்பாடுசார் கருத்தியல்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்கள், புராணச் செய்திகள், தலச்சிறப்பு என்பனவற்றைஅடையாளங்காணமுடிகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10376
Appears in Collections:2023



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.