Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10288
Title: பெண்ணிய நோக்கில் உமாமகேஸ்வரியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
Authors: Kajani, T.
Kumaran, E.
Keywords: உமாமகேஸ்வரி;பெண்ணியம்;பெண்ணிய எழுத்தாளர்
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: சமூகத்தில் ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்குகின்ற பெண்களினுடைய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மலர்ந்த கோட்பாடாக பெண்ணியம் விளங்குகின்றது. இது பிரான்சில் தோற்றம் பெற்று காலப்போக்கில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிற்கு பரவி வளர்ச்சியடைந்துள்ளதுடன் எண்பதுகளில் தமிழ் நாட்டில் கால்பதித்து, இக்காலத்தில் அம்பை, காவேரி, திலகவதி, சிவகாமி, பாமா, அனுராதா, உஷா, சுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றோர் பெண்ணியப் படைப்பாக்க முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுள் குடும்பம் என்ற தளத்தினை மையமாகக் கொண்டு தமது பெணிணயக் கருத்தியலை கவிதை, நாவல், சிறுகதை ஆகிய படைப்பாக்கங்கள் மூலம் வெளிப்படுத்தியவராக உமாமகேஸ்வரி விளங்குகின்றார். 'மரப்hச்சி', 'தொலை கடல்' 'அரளி வனம்', 'வயலட் ஜன்னல்' ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். உமாமகேஸ்வரியின் சிறுகதைகள் குறித்து ஒரு சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன. எனினும் அவை அவரது சிறுகதைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்ற பெண்ணியத் தத்துவத்தின் தாக்கத்தினை அதன் விளைவுகளைச் சரியான வகையில் மதிப்பீடு செய்யவில்லை. உமாமகேஸ்வரியின் சிறுகதைகளினூடாக வெளிவரும் பெண்ணியக் கருத்துக்களை அடையாளம் கண்டு அவற்றின் கனதியினையும், முக்கியத்துவத்தினையும் மதிப்பீடு செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வில் விபரண ஆய்வு மற்றும் பெண்ணிய ஆயு;வு முறையியல்கள் பயன்படுத்தப்பட்டள்ளன. அத்துடன் படைப்பாளியின் சிறுகதையினை நுணுகி ஆராய்வதற்கு பகுப்பாய்வு, ஒப்பீட்டு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முதன்நிலை ஆதாரங்களாக உமாமகேஸ்வரியின் சிறுகதைத் தொகுதிகளும், துணைநிலை ஆதாரங்களாக அச்சிறுகதைத் தொகுதிகள் பற்றி ஏலவே வெளிவந்த கட்டுரைகளும், அறிமுகக் குறிப்புக்களும், விமர்சனங்களும் கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வின் மூலம் உமாமகேஸ்வரியின் படைப்பாளுமை, ஏனைய பெண்ணிய எழுத்தாளர்களிலிருந்து அவர் தனித்துவமாக விளங்கும் வகை, பெண்ணியக் கருத்தியல் வெளிப்பாட்டில் அவரது சிறுகதைகளின் இடம் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10288
Appears in Collections:URSA 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.