Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10284
Title: சமகால இலங்கையில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவ சிந்தனைகளின் பொருத்தப்பாடு
Authors: Virajini Gajathiri, R.
Nirosan, S.
Keywords: கல்வித்தத்துவம்;இலங்கை;பாடசாலை;ஆசிரியர்கள்;மாணவர்கள்
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: கல்வி பற்றிய எண்ணக்கருக்களைப் பகுப்பாய்வு செய்வதாகக் கல்வித் தத்துவம் காணப்படுகின்றது. கல்விக் கொள்கைகள், சிந்தனைகள் என்பவற்றை உருவாக்குபவர்களாக கல்வித் தத்துவ சிந்தனையாளர்கள் விளங்குகின்றனர். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு தத்துவ அறிஞர் ஆவார். ஆவரின் தத்துவ சிந்தனைகள் மிகவும் ஆழமானவையாகும். அந்தவகையில் அவரின் கல்வித் தத்துவ சிந்தனைகள் கல்வியின் நோக்கம், கல்வியில் ஒழுக்கம், ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான உறவு முறை, சுதந்திரமான கல்வி, கல்வியில் உளவியலின் முக்கியத்துவம், இயற்கையூடான கல்வி முறை போன்ற எண்ணக்கருக்களை வெளிப்படுத்துகின்றன. சமகால இலங்கையின் கல்விச் செயற்பாடுகள் கொள்கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதனடிப்படையில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவ சிந்தனைகள் சமகால இலங்கையில் எவ்வாறானதொரு பொருத்தப்பாடுடையனவாய் உள்ளன என்பதைப் பரிசீலனை செய்து கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவ சிந்தனைகளிலிருந்து உள்வாங்கப்பட வேண்டிய பொருத்தமான விடயங்களை சீர்தூக்கிக் காடடுவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். அந்தவகையில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவ சிந்தனைகளானவை சமகால இலங்கை நடைமுறைகளுக்கு பொருத்தமான ஒன்றாகவும் அவசியமான ஒன்றாகவும் காணப்படுகின்றன. ஏனெனில் சமகால இலங்கையில் தனிமனிதன் முதல் முழுநாடு வரையிலும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள். தனிமனிதன் தான் தன்னை உணர்ந்து தனது சிந்தனையை தெளிவுபடுத்தி தான் செய்யும் வினைகள் சரியா? தவறா? என உணரும் பட்சத்தி;ல் சமூகத்தில் சிறந்ததொரு மாற்றத்தை உருவாக்கலாம். அவ்வாறு ஒரு தனிமனித சிந்தனை முதிர்ச்சியானது கல்வியின் மூலமே ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வியானது சரியான முறையில் வழங்கப்படும் பட்சத்தில் சரியானமுறையில் கல்வியை கற்கும் ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான முன்னோடியாகவே காணப்படுகின்றார். அந்த வைகயில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஒவ்வொருவரும் தன்னிலையை உணரும் வகையிலேயே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது கல்வி தத்துவ சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். மனிதப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கல்;வி முறை சமகால இலங்கைக்கு அவசியமானதொன்றாகவே காணப்படுகின்றது. மெய்யறிவு என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு கல்வி செயற்பாடும் இருத்தல் சமகாலத்தில் அவசியமானதொன்றாகும். தனிமனித சிந்தனை முகிழ்ச்சியே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவ சிந்தனையின் வெளிப்பாடாகும். இச்சிந்தனைகள் சமகால இலங்கைக்கு அவசியமான மற்றும் பொருத்தமான தத்துவ சிந்தiனாயக உள்ளது. இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவுகளான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எழுதிய நூல்களையும், இரண்டாம் நிலைத் தரவுகளான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவம் தொடர்பான நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் அதிகார பூர்வ வலைத் தளங்களின் வீடியோக்கள், ஒளிப்பதிவுகள் என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்று முறை, விபரண முறை மற்றும் பகுப்பாய்வு முறை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10284
Appears in Collections:URSA 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.